உளவுத்துறை அலர்ட்… ஜூலை 17ல் பெரிய சம்பவம்… பிரதமர் மோடிக்கு சீக்ரெட் ரிப்போர்ட்!

வரும் ஜூலை 17ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு பிரதமர் மோடி திறந்து வைத்த நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேசிய நிதி தகவல் பதிவேடு, தகவல் பரிமாற்றம், பொது சிவில் சட்டம், டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம் உள்ளிட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மழைக்கால கூட்டத்தொடர்மறுபுறம் பல்வேறு தேசிய மற்றும் பிராந்திய ரீதியிலான பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றனர். இதனால் நடப்பு கூட்டத்தொடரில் ரணகளத்திற்கு பஞ்சமிருக்காது. கடைசியாக நாடாளுமன்றத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. ஒருநாள் கூட அவை நடவடிக்கைகள் பயனுள்ள வகையில் நடைபெறவில்லை.ஸ்தம்பித்த நாடாளுமன்றம்அதானி குழுமம் பற்றி ஹிண்டன்பர்க் அறிக்கை, லண்டனில் ராகுல் காந்தி பேசியது உள்ளிட்ட விஷயங்களை காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மாறி மாறி அஸ்திரங்களாக கையில் எடுத்தன. இதனால் நாள்தோறும் அவை ஒத்திவைப்பு, ஒத்திவைப்பு, ஒத்திவைப்பு. இந்த ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருந்தது.
மக்களின் வரிப்பணம் வீண்மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை தலைவர் ஜெகதீஷ் ஷெட்டரும் உறுப்பினர்களை சமாளிக்க முடியாமல் திணறியது தான் மிச்சம். கடைசி நாளான ஏப்ரல் 6ஆம் தேதி இதேநிலை தான். அதன்பிறகு கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டது. இதனால் பல லட்ச ரூபாய் மக்களின் வரிப்பணம் தான் வீணானது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம்மீண்டும் அப்படி ஒரு சூழல் வராமல் மத்திய அரசு பார்த்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் கடந்த கால நிகழ்வுகள் அப்படியான பார்வையை அளிக்கவில்லை. இந்நிலையில் வரும் ஜூலை 17ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில் என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு தற்போதே தொற்றிக் கொண்டது.
பொது சிவில் சட்டம்2024 மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் பொது சிவில் சட்டம் குறித்து மத்திய அரசு அதிகம் பேசத் தொடங்கியுள்ளது. அதாவது, சாதி, மத, இனம், கலாச்சாரம் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுபடும் உரிமையியல் சட்டங்களை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
​உளவுத்துறை ரிப்போர்ட்இந்நிலையில் வரும் மழைக்கால கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தால், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்யவும், நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு அலையை உருவாக்கவும் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை ரகசிய தகவலை அளித்திருக்கிறது.
இதனால் நிலைமையை எப்படி கையாள்வது, மாற்று ஏற்பாடுகள் என்ன உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மூத்த அமைச்சர்கள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.