அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து கொண்டு தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உடன் நேற்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து கொண்டார். இதனால் மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சமீபத்தில் தான் கட்சியின் செயல் தலைவராக சுப்ரியா சுலே, பிரபுல் படேல் ஆகியோரை நியமித்து பெருமூச்சு விட்டார். கொஞ்சம் ரிலாக்ஸ் மோடில் அரசியல் செய்யலாம் என்று எதிர்பார்த்திருந்த சமயத்தில் அண்ணன் மகன் அஜித் பவார் பெரிய குண்டை தூக்கி போட்டார். இந்நிலையில் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி ஆளும் கூட்டணி அரசுடன் கைகோர்த்த அஜித் பவார் உள்ளிட்ட 9 பேரை தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி சரத் பவார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.