ஜாக் மா பாகிஸ்தான் சீக்ரெட்… அப்படியென்ன பிஸினஸ் டீல்… எகிறப் போகும் எகானமி?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
ஜாக் மா என்றால் சர்வதேச அளவிலான தொழில் துறையில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சீனாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக பல்வேறு துறைகளில் கொடிகட்டி பறந்தவர். இவரை வளர்த்து விட்டதில் சீன அரசின் பங்கு நிறைய உண்டு. சீனாவின் தொழில் சாம்ராஜ்யம் எப்படி இருக்கும் என்பதற்கு ஜாக் மா ஒரு சிறந்த உதாரணம் என முன்னிறுத்தியது.

ஜாக் மா தொழில் சாம்ராஜ்யம்இவரது அலிபாபா நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து பெரிதும் கவனம் ஈர்த்தது. ஒருகட்டத்தில் சீன அரசு மீது ஜாக் மா முன்வைத்த விமர்சனங்களால் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஜாக் மாவிற்கு பல்வேறு வகைகளில் குடைச்சல் ஆரம்பித்தது. இந்த சூழலில் திடீரென சைலண்ட் மோடிற்கு சென்றார். சில காலத்திற்கு இவரை பார்க்கவே முடியவில்லை.​திடீர் சைலண்ட்ஏதாவது வெளிநாடு சென்று செட்டில் ஆகியிருக்கலாம் என்ற பேச்சு அடிபட்டது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஜாக் மா தலைப்பு செய்தியாக மாறியுள்ளார். யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுதொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்த ஆங்கில நாளிதழ் ”The Express Tribune” செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
​தென்கொரியா சர்ப்ரைஸ்​ஒரே நாளில் 2 வயது குறைப்பு ..தென் கொரியா அரசு அறிவிப்பு​​பாகிஸ்தான் பயணம்கடந்த ஜூன் 29ஆம் தேதி ஹாங்காங்கில் இருந்து லாகூர் சென்ற ஜாக் மா சுமார் 23 மணி நேரம் தங்கியுள்ளார். இதனை போர்டு ஆஃப் இன்வஸ்ட்மென்ட் முன்னாள் தலைவர் முகமது அஸ்பர் அஹ்சானும் உறுதி செய்துள்ளார். இந்த பயணத்தில் அரசு அதிகாரிகளையோ, மீடியாவையோ ஜாக் மா சந்திக்கவில்லை.
​ஜாக் மா உடன் சென்றவர்கள்தனியாருக்கு சொந்தமான இடத்தில் தங்கியிருந்தார். அதன்பிறகு ஜூன் 30ஆம் தேதி அன்று தனியார் ஜெட் மூலம் புறப்பட்டு சென்றுவிட்டார். ஜாக் மா உடன் சீனாவை சேர்ந்த 5 தொழிலதிபர்கள், டேனிஷை சேர்ந்த இருவர், ஒரு அமெரிக்கர் ஆகியோர் சென்றுள்ளனர். இதன்மூலம் தொழில் ரீதியாக பாகிஸ்தானில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
​பொருளாதார முன்னேற்றம்இது அமலாகும் பட்சத்தில் பாகிஸ்தான் பொருளாதார முன்னேற்றத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் ஜாக் மா முதலீடு செய்கிறார் என்றால் அது நிச்சயம் புரட்சிகரமாக மற்றும் பலரையும் திரும்பி பார்க்க வைக்கும் பிஸினஸாக தான் இருக்கும். அவர் பரிந்துரைக்கும் நபர்களும் அப்படியே இருக்க வாய்ப்புண்டு.​ஐடி துறையில் அதிரடிஜாக் மா பயணம் தொடர்பாக மற்றொரு விஷயமும் அரசல் புரசலாக வெளிவந்துள்ளது. இவருடன் ஆலோசனை கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஐடி தொழில்கள் தொடர்பான அனுபவங்களை பாகிஸ்தான் தொழிலதிபர்கள், அதிகாரிகள் கேட்டறிந்தனர். அப்போது பல்வேறு புதிய ஆலோசனைகளை வழங்கியதாக சொல்லப்படுகிறது.
​பாகிஸ்தானிற்கு ஜாக்பாட்இதன்மூலம் அந்நாட்டு ஐடி துறை புத்துணர்ச்சி பெறும் எனவும் கூறுகின்றனர். எனவே கூட்டி கழித்து பார்த்தால் ஜாக் மா மூலம் பாகிஸ்தானிற்கு ஆதாயம் கிடைக்கும் என்பது மட்டும் தெரிகிறது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை எதையும் உறுதி செய்ய முடியாது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.