இந்தியாவில் ஜி.எஸ்.டி அறிமுகம் செய்து கடந்த சனிக்கிழமையோடு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக, நிதி அமைச்சகம் ட்விட்டரில் ஒரு ட்வீட் செய்துள்ளது. அதில்…
-
2023-ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.1,61,497 கோடி ஜி.எஸ்.டி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜி.எஸ்.டி நிதியை விட 12% அதிகம்.
-
ஜி.எஸ்.டி-ஐ அறிமுகப்படுத்தியதிலிருந்து, அதன் மொத்த வசூல் ரூ.1.6 லட்சம் கோடியை நான்காவது முறையாகவும், ரூ.1.4 லட்சம் கோடியை தொடர்ந்து 16 மாதங்களாகவும், ரூ.1.5 லட்சம் கோடியை ஏழாவது முறையாகவும் தாண்டுகிறது.
-
முதல் காலாண்டின் சராசரி ஜி.எஸ்.டி மாத வசூல்
2021-22 நிதியாண்டில் ரூ.1.10 லட்சம் கோடியாகவும், 2022-23 நிதியாண்டில் ரூ.1.51 லட்சம் கோடியாகவும், 2023-24 நிதியாண்டில் ரூ.1.69 லட்சம் கோடியாகவும் இருந்துள்ளது.
2022-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜி.எஸ்.டி வசூல் மற்றும் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜி.எஸ்.டி வசூலை ஒப்பிடுகையில் தமிழ்நாடு 20 சதவீத வளர்ச்சியும், பக்கத்து மாநிலங்களான கேரளா 26 சதவீத வளர்ச்சியும், ஆந்திரா 16 சதவீத வளர்ச்சியும், கர்நாடகா 27 சதவீத வளர்ச்சியும், தெலுங்கானா 20 சதவீத வளர்ச்சியும் அடைந்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் வசூலும் 18 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.