"டேஞ்சர்".. கேரளாவில் கொட்டப்போகும் பேய் மழை.. 'ரெட் அலர்ட்' கொடுத்தாச்சு.. 2018 மாதிரியே இருக்கே..

திருவனந்தபுரம்:
கேரளாவில் இன்று இரவு முதலாக மிக மிக கனமழை பெய்யப் போவதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவை சுற்றி போர்வை போர்த்தியுள்ளதை போல கருமேகங்கள் திரண்டு வந்து கொண்டே இருப்பதால் அம்மாநிலத்திற்கு உச்சட்ட எச்சரிக்கையான சிகப்பு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்திலும் பல மாவட்டங்களில் ‘சம்பவம்’ செய்ய மழை காத்துக் கொண்டிருக்கிறது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட தீவிரமாக உள்ளது. கடந்த ஒரு மாதக்காலமாக கேரளாவில் மிதமாக பெய்து மண்ணை குளிர்வித்து வந்த மழை, தற்போது பயமுறுத்த தொடங்கியுள்ளது.

கடந்த 3 நாட்களாக கேரளாவின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதன் தாக்கமாக, கேரள எல்லைகளான கன்னியாகுமரி மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

இந்நிலையில், கேரளாவில் இன்று இரவு முதல் மழையின் ஆட்டம் தொடங்கப் போவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இன்றைக்கு இரவு எர்ணாகுளம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மழை தனது கோரத் தாண்டவத்தை ஆடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை இடுக்கியிலும், கண்ணூரிலும் மிக மிக கனமழை கொட்டப் போவதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த சூழலில், எதிர்பார்த்தை விட மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்பது தெரியவந்ததால் தற்போது கேரளாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை மட்டுமல்லாமல் பெரிய வெள்ளமே ஏற்படும் என்பதுதான் ரெட் அலர்ட் எச்சரிக்கையின் அர்த்தம். இதனைத் தொடர்ந்து, இடுக்கி, எர்ணாகுளம், கண்ணூர், பத்தினம்திட்டா, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்தும் பேரிடர் மீட்புப் படையினர் அங்கு சென்றுள்ளனர்.

இது நடந்தால்.. ஸ்டாலினை தமிழ்நாட்டுக்குள் விட மாட்டோம்.. அண்ணாமலை பகிரங்க எச்சரிக்கை

இது ஒருபுறம் இருக்க, கேரளாவில் 2018-ம் ஆண்டு நிகழ்ந்ததை போல மிகப்பெரிய மழை வெள்ளம் ஏற்படும் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஏனெனில் அந்த ஆண்டும் ஜூலை மாதத் தொடக்கத்தில் தான் மழையின் தீவிரம் தொடங்கியது. அப்போதும் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே, இந்த ஆண்டும் அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் கேரள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.