தலைவரின் ஆட்டம் ஆரம்பம்.. ஜெயிலர் பர்ஸ்ட் சிங்கிள் காவாலா… தரமான அப்டேட்!

சென்னை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கான புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஜெயிலர்: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கடந்த நாற்பது ஆண்டுகளாக வலம் வருபவர் நடிகர் ரஜினி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இதனால், ரஜினியின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. எனவே தன் அடுத்த படத்தின் வெற்றியின் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இருக்கின்றார் ரஜினி.

படத்தின் கதை: தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். அதிரடி ஆக்ஷன் கலந்த டார்க் காமெடி படமாக உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் ரஜினி ஜெய்லராக இருக்கின்றார். அந்த ஜெயிலில் இருந்து சில கைதிகள் தப்பிக்க முயற்சி செய்கின்றனர். அதை ரஜினி தடுத்து நிறுத்துஅவருக்கும் வில்லன்களுக்கும் மோதல் வெடிக்கின்றது. அதன் பிறகு நடப்பதே படத்தின் கதை,

பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ: இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நெல்சன் ரஜினிகாந்தின் போட்டைவை தொட்டுகும்மிட்டுவிட்டு இன்னைக்காவது நல்லது நடக்கணும் என்கிறார். நெல்சன் மற்றும் அனிருத்தின் உரையாடல்களுடன் கூடிய இந்த புரோமோ வெளியாகி உள்ளது. அந்த புரோமோவில் வருகிற ஜூலை 6-ந் தேதி ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான காவாலா என்கிற பாடல் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்தடுத்த படங்களில்: ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ‘தலைவர் 170’ படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஷ்கரண் தயாரிக்க உள்ளது. இதே போல, லோகேஷ் கனகராஜ், லியோ படத்தை முடித்துவிட்டு ‘தலைவர் 171’ படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், லோகேஷ் இயக்கும் படத்தில் ரஜினியுடன் தானும் நடிப்பதாக இயக்குநர் மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.