"திமுகவிலும் சாதி".. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றிய பா. ரஞ்சித்.. சட்டென பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்

சென்னை:
‘மாமன்னன்’ திரைப்படத்தை புகழ்ந்து பேசுவது போல திமுகவில் உள்ள சாதி பாகுபாட்டை இயக்குநர் பா. ரஞ்சித் சுட்டிக்காட்டிய நிலையில், அதற்கு

பதிலளித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’ . அரசியலில் நடக்கும் சாதிய பாகுபாட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வசூலை வாரி குவித்து வரும் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படத்தை பாராட்டி இயக்குநர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், அதில் உள்ள பட்டியலினத்தவர்களுக்கு உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக மாமன்னன் திரைப்படம் சொல்லி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், திமுகவில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை உதயநிதி ஸ்டாலினும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக அவர் ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை இருப்பதாகவும் ரஞ்சித் தெரிவித்திருந்தார். பா. ரஞ்சித்தின் இந்தக் கருத்தானது உதயநிதி ஸ்டாலினை புகழ்வது போல புகழ்ந்து, திமுகவை இகழும் வகையில் இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பா. ரஞ்சித்துக்கு பதிலளிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மாமன்னன்’ திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் – ஏற்றத்தாழ்வும்

வில் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை மேற்கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது திமுக.

ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் சமூகநீதியை அரியணை ஏற்றி, அரசியல் களத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா, கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார். பராசக்தியில் தொடங்கி `மாமன்னன்’ வரை கலைவடிவங்களிலும் சமூக நீதியை தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.