சென்னை: பல நடிகர்கள் காதல் வலை விரித்த போதும், அதில் சிக்காத ஒரே நடிகை என பயில்வான் ரங்கநாதன் நடிகை சுவலட்சுமியை புகழ்ந்து பேசி உள்ளார்.
90களில் தமிழின் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் திகழ்ந்தவர் சுவலட்சுமி. கொல்கத்தாவைச் சேர்ந்த சுவலட்சுமி, 1994 ஆம் ஆண்டு உத்தோரன் என்ற பெங்காலி படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
நடிகை சுவலட்சுமி: அதன் தமிழில் ஆசை, லவ் டூடே, நிலாவே வா போன்ற அடுத்தடுத்த பல திரைப்படங்களில் நடித்து தமிழின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.
பல நடிகைகளின் அந்தரங்க விஷயம் குறித்து படுமோசமாக விமர்சிக்கும் பயில்வான் ரங்கநாதன் நடிகை சுவலட்சுமி குறித்து வீடியோ ஒன்றில் பேசி உள்ளார். அதில் 2000ம் ஆண்டுக்கு பின் தமிழில் சினிமாவில் கதாநாயகிகளே கவர்ச்சி ஆட்டம், குத்துப்பாடலுக்கு நடனமான தொடங்கிவிட்டார்கள். இதற்காக நடிகைகளுக்கு அதிகமாக சம்பளமும் கொடுக்கப்பட்டது.
மும்பை அழகிகள்: தமிழ் படங்களில் தமிழ் பேசும் பெண்கள் நடிகையாக வராமல் இருப்பதற்கு காரணமே, சினிமாவிற்கு போனால் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பதால், தமிழ் பெண்கள் சினிமாவில் நடிக்க வருவது குறைவு. இதனால் தான் தெலுங்கு, மலையாளம், பாலிவுட்டில் இருந்து வந்து நடிகை ஆதீத கவர்ச்சி காட்டி நடித்தார்கள். குறிப்பாக மும்பையில் இருந்து வரும் மாடல் அழகிகள் கவர்ச்சியை போதும் என்று சொல்லும் அளவுக்கு குறைவில்லாமல் கொடுத்தார்கள். இதனால், பெரும்பாலான இயக்குநர்கள் மும்பை நடிகைகளை தமிழில் அறிமுகப்படுத்துவதில் மும்முரமாக இருந்தனர்.
7 ஹிட் படம்: கவர்ச்சியாக நடித்தால் இலக்கை அடைய முடியும் என்ற எண்ணத்தை நடிகை சாவித்ரி, தேவிகா, பத்மினி போன்ற நடிகைகள் மாற்றினார்கள். அதேபோல முன்னணி நடிகையான இருந்த சுவலட்சுமி பல ஹிட் திரைப்படங்களில் நடித்து கனவுக்கன்னியாக இருந்த போதும் கவர்ச்சியாக நடிக்க மறுத்துவிட்டார். தமிழில் இவர் மொத்தமே நடித்தது 13 திரைப்படங்கள் தான். அதில் 7 திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாகின.
கவர்ச்சிக்கு நோ: நடிகை சுவலட்சுமி பெரும்பாலான படங்களில் சேலை கட்டிக் கொண்டு போர்த்திக்கொண்டுதான் நடித்தார். எத்தனையோ நடிகர்கள் வற்புறுத்தியும் அவர் கவர்ச்சியாக நடிக்கவில்லை. கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்ற முடிவில் உறுதியாக இருந்தால், கமல்ஹாசன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் அவர் மறுத்துவிட்டார். அதேபோல ரஜினி படத்திலும் நடிக்க மறுத்துவிட்டார்.
காதல் வலையில் சிக்காதா நடிகை: பல நடிகர்கள் சுவலட்சுமிக்கு காதல் வலை வீசிய போதும் அதை அறுத்துக்கொண்டு வெளியே வந்தவர் சுவலட்சுமி, நடிகர் கார்த்திக் தன்னுடன் நடித்த நடிகைகள் அத்தனை பேரையும் தன்னுடைய காதல் வலையில், சிக்க வைத்துவிடுவார். ஆனால் கார்த்திக்கின் காதல் வலையில் சிக்காத ஒரே நடிகை சுவலட்சுமி அந்த அளவுக்கு டீசன்டாக நடித்தவர் சுவலட்சுமி என்று பயில்வான் ரங்கநாதன் சுவலட்சுமியை புகழ்ந்து பேசி உள்ளார்.