"பன்றியா.. நாயா".. 'மாமன்னன்' பேசும் அரசியலே இதுதான்.. அனல் தெறிக்க பேசிய திருமாவளவன்

சென்னை: பன்றியா.. நாயா.. என்பதே ‘மாமன்னன்’ பேசும் அரசியல் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், இமானுவேல் சேகரன் கொலை வழக்குக்கும், மாமன்னன் திரைப்படத்துக்கும் இடையேயான தொடர்பை பற்றியும் திருமாவளவன் எடுத்துரைத்தார்.

​மிரட்டும் மாமன்னன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’ . அரசியலில் நடக்கும் சாதிய பாகுபாட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வசூலை வாரி குவித்து வரும் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.பன்றி – நாய் அரசியல்​இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்து சென்னையில் நேற்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் விரிவாக பேசினார். அவர் பேசியதாவது:

பன்றியா.. நாயா..? ‘மாமன்னன்’ திரைப்படத்தை பார்த்தேன். பன்றியா.. நாயா..? அதுதான் போட்டி. புரிந்துகொள்ளுங்கள். இதுவரை எத்தனையோ திரைப்படங்களில் பார்த்திருப்போம். கதாநாயகி மான் குட்டிகளை தூக்கி கொஞ்சுவார்கள். நாய் குட்டியை தூக்கி கொஞ்சுவார்கள். முதன்முறையாக ஒரு படத்தில் பன்றிக்குட்டியை தூக்கி கதாநாயகி கொஞ்சுவதை இப்போதுதான் பார்க்கிறோம்.
​அதுதான் காதல்: ​தலித் அல்லாத சமூகத்தில் பிறந்த பெண், கதாநாயகனை காதலிப்பதாலேயே பன்றிக்கு முத்தமிடுகிறாள். ஏனென்றால், கதாநாயகன் பன்றிகளை நேசிக்கிறான். காதல் எப்படியெல்லாம் செய்ய வைக்கிறது பாருங்கள். நீ எதை இழிவு என சொல்கிறாயோ அதை நான் உயர்வாக காட்டுவேன். எதை நீ அருவருப்பு என சொல்கிறாயோ அது எனக்கு பெருமைக்குரியது என சொல்லாமல் இருக்கிறார் மாரி செல்வராஜ்.
​அப்பா.. உட்காரப்பா..: ​திரைப்படத்தில் எம்எல்ஏ மாமன்னன் முதலமைச்சரை சந்திக்க போகிறார். முதலமைச்சர் அறைக்குள் மாமன்னன் சென்ற சிறிது நேரத்திலேயே அவரது மகன் பதற்றம் அடைய தொடங்குகிறான். காவலர்களின் தடுப்பை மீறி கதவை உடைத்து உள்ளே செல்கிறான். அங்கு தனது அப்பா, முதல்வர் அருகில் அமர்ந்து பேசுவதை பார்த்து அப்படியே அமைதியாகி விடுகிறான். மாமன்னன் கதையின் மையக்கருவே “அப்பா.. உட்காரப்பா..” என்பது தான்.

​இமானுவேல் சேகரன்: ​இந்தக் கருவை மாரி செல்வராஜ் எடுக்கிறார் என்றால் அவருக்குள் அம்பேத்கர் சிந்தனை இருக்கிறது. அவருக்குள் ஒரு இடதுசாரி சிந்தனை இருக்கிறது. படம் ஓப்பனிங்கே அம்பேத்கர் படம். அப்புறம் பெரியார் சிலை. பிறகு சேகுவேரா படம், புத்தர் சிலை. இதுதான் இடதுசாரி அரசியல். இதுதான் சமத்துவ அரசியல். நிற்பதா, உட்காருவதா என்பதுதான் இன்று சாதியின் அடையாளமாக இருக்கிறது. இமானுவேல் சேகரனை கொன்றார்களே.. எதனால்? நாற்காலியில் உட்கார்ந்தார் என்பதற்காக தான் அந்தப் படுகொலை நடந்தது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.