மாவீரன் படத்தில் உள்ள சஸ்பென்ஸ் இதானா?
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சுனில், சரிதா,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் மாவீரன். இசையமைப்பாளர் பரத் ஷங்கர் இசையமைக்கும் இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் ரசிகர்களை திருப்தி செய்யவில்லை. இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மாவீரன் படத்தில் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் ஒளிந்து உள்ளதாக பரவி வந்தது. தற்போது அந்த சர்ப்ரைஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் காதில் மட்டும் ஒரு குரல் அடிக்கடி ஒலிக்குமாம். அந்த குரலை கொடுப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதியை முதலில் அணுகியுள்ளனர். அதன்பின் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து அந்த குரல் கொடுக்க பேச்சு வார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இறுதியாக யார் அந்த கொடுத்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், இன்று வெளியாகும் மாவீரன் டிரைலரில் அந்த மர்ம குரல் யார் என்று தெரிய வரும் என்கிறார்கள்.