சென்னை: ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அர்ஜுனின் இளைய மகளின் தாறுமாறான கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து இணையமே திக்குமுக்காடி போனது.
தமிழ் சினிமாவில் 90களில் தற்போது வரை பல திரைப்படங்களில் ஹீரோவாகவும், வில்லனாக குணச்சித்திர கதபாத்திரத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
பல திரைப்படங்களை இயக்கியும் நடித்திருக்கும், நடிகர் அர்ஜூன், பொதுவாகவே ஆக்சன் படங்களிலும் தேசபக்தி படங்களிலும் நடித்து ரசிகர்களில் மனதில் இடம் பிடித்தார்.
ஆக்ஷன் கிங் அர்ஜூன்: நடிகர் அர்ஜுன் முன்னாள் நடிகை நிவேதிதா என்பரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் விஷாலின் பட்டத்து யானை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
விரைவில் திருமணம்: அர்ஜூன் மூத்த மகள் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் அர்ஜுன் மற்றும் தம்பி ராமையாவுக்கு தெரிந்ததை அடுத்து இருவரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டனர். இருவீட்டார் சம்மதத்துடன் விரைவில், இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.
அட அட என்ன அழகு: இந்நிலையில் அர்ஜூனின் இளைய மகள் அஞ்சனாக ஹீரோயின் போல நீச்சல் உடையில் சும்மா மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பேன்ஸ் அட அட என்ன அழகு என்று வர்ணித்து வருகின்றனர். அர்ஜூனின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜூன், கடந்தாண்டு ஹேண்ட் பேக்குகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார்.
குவியும் பாராட்டு: பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கி இருக்கிறார். உலகத்திலேயே இப்படிதொழிலை செய்வது இதுதான் முதல் முறை என்று கூறப்படும் நிலையில், இத்தகைய பெருமைக்குரிய சிறப்பால் அஞ்சனா அர்ஜூன் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார். தனது கம்பெனி ஹேண்ட் பேக்குகளை புரமோட் செய்யும் மாடலாகவும் திகழ்ந்து வருகிறார்.