Dhanush: திருப்பதியில் மகன்களுடன் சேர்ந்து மொட்டை அடித்த தனுஷ்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வந்தார் தனுஷ். அந்த படத்திற்காக தலைமுடி, தாடியை நீளமாக வளர்த்திருந்தார். ஒரு கட்டத்தில் தனுஷ் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார்.

பார்ட்னர் படம் பற்றி பேசிய ஹன்ஷிகா
இந்நிலையில் அப்பா கஸ்தூரிராஜா, அம்மா, மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று இன்று சாமி தரிசனம் செய்துள்ளார் தனுஷ். திருப்பதியில் மகன்களுடன் சேர்ந்து மொட்டையடித்திருக்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அப்பா போன்றே யாத்ராவும், லிங்காவும் வேட்டி, சட்டை அணிந்து மொட்டை அடித்து தொப்பியுடன் நடந்து வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

மொட்டை அடித்து தாடியில்லாமல் வெறும் மீசையுடன் இருக்கும் தனுஷை பார்த்த ரசிகர்கள், மீண்டும் பழையபடி சின்னப் பையன் போன்று தெரிகிறார் என்கிறார்கள். இரண்டு வளர்ந்த மகன்களுக்கு அப்பாவாக இருந்தாலும் தாடியை எடுத்துவிட்டு, முடியை வெட்டினால் யாத்ராவுக்கு அண்ணன் போன்று தெரிவார் தனுஷ். இதை திரையுலக பிரபலங்கள் சிலரே தெரிவித்துள்ளனர்.

கேப்டன் மில்லர் பட வேலை முடிந்துவிட்டதால் கெட்டப் மாறிவிட்டார். ஆனால் அவர் மொட்டை அடிப்பார் என எதிர்பார்க்கவில்லை. மேலும் யாத்ராவும், லிங்காவும் அப்பாவுடன் மொட்டை அடித்துக் கொள்வார்கள் என்பதையும் யாரும் எதிர்பார்க்கவில்லை.

முதல் முறையாக ரூ. 200 கோடி ஹிட் கொடுத்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?: ரஜினியோ, விஜய்யோ இல்ல நம்ம…

தனுஷ், மகன்களை ஒன்றாக பார்த்த ரசிகர்கள் ஒருவேளை ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சென்றிருப்பாரோ என அவரை தேடினார்கள். ஆனால் அவர் இல்லை. தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். தங்களின் விருப்பத்தை அவ்வப்போது தனுஷ், ஐஸ்வர்யாவிடம் கூறி வருகிறார்கள்.

தனுஷை பிரிந்து சென்றபோது மகன்களை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். மகன்களை தனுஷை பார்க்கவிடாமல் செய்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் ஐஸ்வர்யா அப்படி செய்யும் ஆள் இல்லை என்றார்கள் ரஜினி ரசிகர்கள். இந்நிலையில் தனுஷுடன் மகன்களை பார்த்தவர்களோ, ஐஸ்வர்யாவுக்கு நல்ல மனசு என்கிறார்கள்.

ப. பாண்டி படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் தனுஷ். அதன் பிறகு அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் தான் மீண்டும் படம் இயக்கப் போகிறார்.

கேப்டன் மில்லரை அடுத்து டி50 படத்தை இயக்கி, நடிக்கவிருக்கிறார் தனுஷ். அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி50 படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

எஸ்.ஜே. சூர்யாவும், சந்தீப் கிஷனும் தனுஷின் சகோதரர்களாக நடிக்கிறார்கள். முன்னதாக விஷ்ணு விஷால் நடிப்பதாக இருந்தது. டி50 படத்தில் தனுஷுக்கு அல்ல மாறாக சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிக்கிறார் அபர்ணா பாலமுரளி.

டி50 படத்திற்கு ராயன் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Maamannan:மாமன்னனில் வடிவேலு மனைவியாக நடித்தவர் பெரிய இடத்து மருமகள்னு தெரியுமா?

டி50 படத்திற்காக சென்னை ஈ.சி.ஆர். பகுதியில் 500 வீடுகள் அடங்கிய செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 90 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்கப் போகிறாராம் தனுஷ்.

ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தப் போகிறார் என்றால் பக்கா பிளானுடன் தான் வருகிறார். ப. பாண்டியை போன்றே ராயனும் நிச்சயம் வெற்றி பெறும் என்று ஏற்கனவே பேசப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.