வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை :அன்னிய செலாவணி சட்டத்தை மீறியது தொடர்பான வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானியிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
உலக பணக்காரர்களில் ஒருவரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி; ரிலையன்ஸ் ஏ.டி.ஏ., குழுத்தின் தலைவராக உள்ளார்.
இந்நிலையில் நேற்று, அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட புதிய வழக்கு தொடர்பான விசாரணைக்கு, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், தொழிலதிபர் அனில் அம்பானி ஆஜரானார். அப்போது, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.
யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் உள்ளிட்டோருக்கு எதிரான பண மோசடி வழக்கில், கடந்த 2020ல், அமலாக்கத் துறை முன், தொழிலதிபர் அனில் அம்பானி ஆஜராகியது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement