Maamannan: மாமன்னன் படத்திற்காக மாரி செல்வராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கின்றார். இயக்குனர் ராமிடம் கற்றது தமிழ், தங்கமீன்கள் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் மாரி செல்வராஜ்.

இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான அப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

மாமன்னனின் வெற்றி

இதைத்தொடர்ந்து தனுஷின் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தொடர் வெற்றிகளை கொடுத்தார் மாரி செல்வராஜ். இதன் மூலம் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்படும் இயக்குனரான மாரி செல்வராஜ் மாமன்னன் வெற்றியின் மூலம் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இடம்பிடித்தார்.

Maaveeran: டீகோட் செய்யப்பட்ட மாவீரன் ட்ரைலர்..படத்தில் இவ்ளோ விஷயம் இருக்கா ? அடேங்கப்பா..!

உதயநிதியின் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. என்னதான் இப்படம் சில சலசலப்புகளை ஏற்படுத்தினாலும் பெரும்பாலான ரசிகர்கள் மாமன்னன் படத்திற்கு தங்களின் ஆதரவை கொடுத்துள்ளனர்.

அதன் காரணமாக மாமன்னன் திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றிநடைபோட்டு வருகின்றது. இந்நிலையில் மாமன்னன் படத்தில் வடிவேலுவை வித்யாசமான ரோலில் மாரி செல்வராஜ் காட்டியதும், அவர் எடுத்துக்கொண்ட கதைக்களமும் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகின்றது.

மாரி செல்வராஜின் சம்பளம்

குறிப்பாக இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வடிவேலுவை மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தின் மூலம் வழங்கியது ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. சமீபகாலமாக வடிவேலு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஹிட் கொடுக்காத நிலையில் மாமன்னன் திரைப்படம் அவரை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து வந்துள்ளது என சொல்லலாம்.

மேலும் இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இதன் காரணமாக அவர்களின் அடுத்த படத்திற்கான சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது என பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தின் சம்பளமும் கணிசமாக உயர்ந்துள்ளதாம்.

இந்நிலையில் மாமன்னன் படத்தை இயக்குவதற்காக மாரி செல்வராஜ் சுமார் ஐந்து கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளாராம். இதையடுத்து மாமன்னன் படம் ஹிட்டானதை அடுத்து அடுத்த படத்திற்கான அவரின் சம்பளம் கண்டிப்பாக அதிகரிக்கும் எனவே எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

அந்த வகையில் அவர் அடுத்ததாக தனுஷ் நடித்து தயாரிக்க இருக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்காக மாரி செல்வராஜ் மாமன்னன் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை விட அதிகமாகவே வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இந்த சம்பள விவரம் எல்லாம் உண்மையா இல்லையா என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.