Maamannan: மாரி செல்வராஜுக்கு கார் பரிசளித்த போது உதயநிதி சட்டையில் 'இதை' கவனிச்சீங்களா.!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்தப்படம் குறித்து பல்வேறு விவாதங்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. மேலும், வடிவேலுவுக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக மாமன்னனை கொண்டாடி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இந்நிலையில் ‘மாமன்னன்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் ஒன்றை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்நிகழ்வின் போது உதயநிதி, தயாரிப்பாளர்கள் எம். செண்பகமூர்த்தி, ஆர், அர்ஜுன் துரை ஆகியோர் உடனிருந்தனர். மேலும், கார் பரிசளித்த போது உதயநிதி ஸ்டாலினின் சட்டையில் பன்றிக்குட்டி றெக்கையுடன் பறப்பது போன்ற டிசைன் இருந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதுதொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்த
உதயநிதி ஸ்டாலின்
, ‘ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களையும் கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்து கருத்துக்களை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது.

அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிகரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. ரெட் ஜெயன்ட் நிறுவனம் மாரி செல்வராஜ் சாருக்கு மினி கூப்பர் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’ க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி’ என பதிவிட்டிருந்தார்.

Maamannan: ஒரே படத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்படாது.. பா. ரஞ்சித்துக்கு பதிலளித்த உதயநிதி.!

இந்நிலையில் இந்நிகழ்வில் உதயநிதி பன்றிக்குட்டி றெக்கையுடன் பறக்கும் டிசைன் அணிந்துள்ள சட்டை குறித்து இணையத்தில் நெட்டிசன்கள் பல பதிவுகள் பகிர்ந்து வருகின்றனர். தனது முதல் படத்தில் நாயை ஹீரோவுடன் பயணிக்கும் ஒரு கதாபாத்திரமாக கொண்டு வந்திருந்த மாரி செல்வராஜ், தற்போது ‘மாமன்னன்’ படத்தில் பன்றிக்குட்டியை வைத்து பல குறியீடுகளை காட்டியுள்ளார்.

அத்துடன் இதுவரை பன்றிக்குட்டியை திரையில் காட்டுவதே அரிதாக இருந்த தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஹீரோ, ஹீரோயின் கைகளில் பன்றிக்குட்டியை மாரி செலவராஜ் தவழவிட்டிருந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. மேலும், ‘மாமன்னன்’ வெளியான பிறகு உதயநிதி பன்றிக்குட்டியை மேய்ப்பது போன்ற காட்சிகள் குறித்து இணையத்தில் சிலர் கிண்டலடித்தனர். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது பன்றிக்குட்டி றெக்கையுடன் பறக்கும் டிசைன் உள்ள சட்டையை உதயநிதி அணிந்துள்ளதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Kamal Haasan: அசால்ட்டாக ‘லியோ’ சாதனையை நெருங்கிய கமல் – வினோத் படம்: மாஸ் காட்டும் ஆண்டவர்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.