ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
உதயநிதியின் நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் வெற்றிநடைபோட்டு வருகின்றது. உதயநிதியின் கடைசி படம் இது என்பதாலும், மாரி செல்வராஜுடன் அவர் முதல்முறையாக கூட்டணி அமைத்துள்ளார் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
மேலும் மாமன்னன் படத்தில் வடிவேலு வித்யாசமான ரோலில் நடித்துள்ளார் என்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியது. இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகின்றது.
மாமன்னனாக வடிவேலு
இப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் பத்து கோடிவரை வசூலித்தது. அதைத்தொடர்ந்து கடந்த மூன்று நாட்களில் படத்திற்கு அமோகமான வசூல் கிடைக்கவே படத்தின் வெற்றி விழாவை படக்குழு கொண்டாடியது. இந்த வெற்றி கொண்டாட்டத்தில் வடிவேலு பங்கேற்காதது சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.
Maamannan: மாமன்னன் வெற்றியா ? தோல்வியா ?வெளியான ரிப்போர்ட் இதோ ..!
இந்நிலையில் மாமன்னன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாரி செல்வராஜ் வடிவேலுவை பற்றியும் அவருடன் பணியாற்றியதை பற்றியும் பல விஷயங்களை பேசியுள்ளார். அவர் பேசியதாவது, மாமன்னன் படத்தில் சீரியஸான ரோலில் வடிவேலுவை நடிக்க வைத்தேன். அவரை இந்தளவிற்கு ரசிகர்கள் சீரியஸாக பார்த்திருக்க மாட்டார்கள். அது எனக்கு சற்று சவாலாகவே இருந்தது.
வடிவேலுவை பேசாமல் உட்கார வைத்து பல ஷாட்களை எடுத்தேன். வடிவேலு சீரியஸாக எதுவுமே பேசாமல் யோசித்துக்கொண்டிருப்பதை போன்ற ஷாட்களை நான் எடுக்கும்போது செட்டில் உள்ள சிலருக்கு பயம் வந்துவிட்டது. வடிவேலு உட்பட அனைவரும் சற்று யோசித்தனர்.
மாரி செல்வராஜின் நம்பிக்கை
அதன் பிறகு வடிவேலு என்னை அழைத்து, நான் இதுவரை இதுபோல நடித்ததில்லை. ரசிகர்கள் என்னை முழுக்க முழுக்க நகைச்சுவை நடிகராகவே பார்த்துவிட்டனர். எனவே நான் எதுவுமே பேசாமல் சீரியஸாக யோசித்துக்கொண்டிருந்தால் அவர்கள் சிரித்தாலும் சிரித்துவிடுவார்கள். எனவே அதை மட்டும் கவனமாக பார்த்துக்கோங்க என தன்னை வடிவேலு எச்சரித்ததாக மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
ஆனால் வடிவேலுவை இப்படத்தில் முற்றிலும் வித்யாசமாக தன்னால் காட்டமுடியும் என நம்பியதாக கூறியுள்ளார் மாரி செல்வராஜ். இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரமும், நடிப்பும் தனித்து நிற்பதாக பலர் பாராட்டி வருகின்றனர். எனவே மாரி செல்வராஜ் நினைத்ததை நடத்தி காட்டிவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.