Nayanthara: நயன்தாராவால் தமன்னாவுக்கு அடித்த ஜாக்பாட்: எல்லாம் நேரம் தான்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Tamannaah: நயன்தாராவுக்கு கிடைக்காமல் போனது தமன்னாவுக்கு கிடைத்து ஜாக்பாட் அடித்த விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

​ஹீரோயின்​Vijay: 2026 சட்டசபை தேர்தலை குறி வைக்கும் விஜய்: சினிமாவில் இருந்து 3 ஆண்டுகள் பிரேக்?ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க இயக்குநர் ஒருவரை தேர்வு செய்வதும், அந்த நடிகையால் நடிக்க முடியாமல் போவதும் காலம், காலமாக நடந்து வருகிறது. அப்படி தவறவிடப்படும் படங்கள் எல்லாம் சொல்லி வைத்தது போன்று சூப்பர் ஹிட்டாவதும் உண்டு. அதை பார்த்து அய்யோ, இந்த படத்தில் போய் நடிக்காமல் போய்விட்டோமே என நடிகைள் ஃபீல் பண்ணியதும் உண்டு. அப்படி சில நடிகைகள் தவறவிட்ட படங்கள் பற்றி பார்ப்போம்.ஹன்சிகா​பார்ட்னர் படம் பற்றி பேசிய ஹன்ஷிகா​​த்ரிஷா​விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கதீஜா கதாபாத்திரத்தில் த்ரிஷா தான் நடிக்க வேண்டியது. த்ரிஷாவும், நயன்தாராவும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார் விக்னேஷ் சிவன். ஆனால் அது நடக்கவில்லை. அதன் பிறகே சமந்தாவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

​நா ரெடி: அரசியலில் குதிக்கும் தளபதி விஜய்

​கீர்த்தி சுரேஷ்​Maamannan: ரிலீஸான நாலே நாளில் ரூ. 25 கோடி வசூலித்த மாமன்னன்:கூட்டத்தை ஈர்க்கும் வடிவேலுமணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷை தேடி வந்தது. ஆனால் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் நடிக்க, பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வெளியேறினார் கீர்த்தி சுரேஷ். இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் ஒரே நேரத்தில் நடந்ததால் ரஜினி படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார் கீர்த்தி.

​நயன்தாரா​லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான பையா படம் சூப்பர் ஹிட்டானது. கார்த்தி, தமன்னா ஜோடியை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க தான் லிங்குசாமி ஆசைப்பட்டாராம். ஆனால் நயன்தாராவின் சம்பளம் அதிகமாக தெரிந்திருக்கிறது. இதையடுத்து சம்பளத்தை குறைக்கச் சொல்ல, நயன்தாரா முடியாது என்று கூறிவிட்டாராம். அதன் பிறகே தமன்னாவை நடிக்க வைத்திருக்கிறார்கள்.
​ஸ்ருதி ஹாசன்​ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மூக்குத்தி அம்மன் படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்தது. பாலாஜி தன் நண்பன் என்பதால் அம்மனாக நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் நயன்தாரா ஆர்.ஜே. பாலாஜிக்கு போன் செய்து, என்னை வைத்து ஏன் படம் எடுக்கவில்லை என கேட்க அந்த வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. மூக்குத்தி அம்மனாக சிறப்பாக நடித்திருந்தார் நயன்தாரா என்றே கூற வேண்டும்.
​ப்ரீத்தி ஜிந்தா​முதல் முறையாக ரூ. 300 கோடி வசூல் செய்த தமிழ் படம் என்கிற பெருமையை பெற்ற எந்திரனில் முதலில் கமல் ஹாசனும், ப்ரீத்தி ஜிந்தாவும் நடிப்பதாக இருந்தது. போட்டோஷூட் எல்லாம் நடத்தி புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் படப்பிடிப்பு பல முறை தள்ளிப் போக கமல், ப்ரீத்திக்கு பதில் ரஜினிகாந்தும், ஐஸ்வர்யா ராய் பச்சனும் நடித்தார்கள்.

​முதல் முறையாக ரூ. 200 கோடி ஹிட் கொடுத்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?: ரஜினியோ, விஜய்யோ இல்ல நம்ம…​​​சாய் பல்லவி​மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை பலருக்கும் பிடித்த படமாகும். அந்த படத்தில் ஹீரோயின் லீலாவாக நடிக்க முதலில் சாய் பல்லவியிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் மணிரத்னம். அதை சாய் பல்லவியே பேட்டி ஒன்றில் தெரிவித்தார். ஆனால் லீலா கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவி மிகவும் இளமையாக தெரிவதாகக் கூறி அவருக்கு பதில் அதிதி ராவ் ஹைதரியை நடிக்க வைத்தார் மணிரத்னம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.