ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய்க்கு அரசியலுக்கு செல்லும் ஆசை உள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஆழம் பார்த்து வந்தவர் இது தான் நேரம், நா ரெடி என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.
பார்ட்னர் படம் பற்றி பேசிய ஹன்ஷிகா
அதன் ஒரு கட்டமாகத் தான் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை சென்னைக்கு வரவழைத்து பாராட்டினார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கல்வி விருது விழாவுக்து வந்த அனைவரும் அண்ணா, நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என அன்புக் கோரிக்கை விடுத்துவிட்டு சென்றார்கள்.
இந்நிலையில் தான் விஜய் பற்றிய அந்த தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை குறி வைத்துள்ளாராம் விஜய். அதனால் தொடர்ந்து படங்களில் நடித்தால் தேர்தல் வேலையில் கவனம் செலுத்த முடியாது என்று மூன்று ஆண்டுகள் பிரேக் எடுக்க முடிவு செய்திருக்கிறாராம்.
அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கவிருக்கிறார்.
படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவிருக்கிறது. தளபதி 68 படத்தை 2024ம் ஆண்டு தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு.
அந்த படத்துடன் நடிப்பில் இருந்து பிரேக் எடுக்கப் போகிறாராம் விஜய். அவரின் இந்த முடிவு குறித்து அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
விஜய் தன் 49வது பிறந்தநாளை கடந்த ஜூன் 22ம் தேதி கொண்டாடினார். அவரின் பிறந்தநாளையொட்டி அடிக்கப்பட்ட போஸ்டர்களில் வருங்கால முதல்வரே என ரசிகர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
மதுரையில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த போஸ்டரில் கூறப்பட்டிருந்ததாவது,
Vijay: தளபதியே முடியட்டும் திராவிட ஆட்சி, உந்தன் தலைமையில் மலரட்டும் மக்களாட்சி: வைரல் போஸ்டர்
65 ஆண்டு காலமாக திராவிட ஆட்சிகள் மாறினாலும்.. மக்கள் துயர்படும் காட்சிகள் மட்டும் மாறவில்லை..தளபதியே முடியட்டும் திராவிட ஆட்சி. உந்தன் தலைமையில் மலரட்டும் மக்களாட்சி. 2026- time to lead என்று இருந்தது.
இந்நிலையில் அரசியல் களத்தில் துணிந்து குதிக்கிறார் விஜய். இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடன் கூட்டணி வைப்பீர்களா என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, விஜய் தன் கட்சி கொள்கைகளை தெளிவாக கூற வேண்டும். அது எங்கள் கட்சி கொள்கைகளுடன் ஒத்துப் போனால் சேர்ந்தே பயணிக்கலாம் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vijay:விஜய் அரசியலுக்கு வந்தால் கூட்டணி வைக்கலாம், ஆனால்…: உதயநிதி ஸ்டாலின்
லியோ படத்தில் வரும் நா ரெடி பாடல் வெளியானபோதே விஜய் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என பேச்சு கிளம்பியது. அது வெறும் பாடல் இல்லை. தான் அரசியலுக்கு வருவதை அறிவிக்கும் பாடல். ரசிகர்களுக்கு தன் வருகையை அறிவித்துவிட்டார் என பேசப்பட்டது.
இதற்கிடையே அரசியலுக்கு வருவது எல்லாம் சரி. ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். கேப்டன் விஜயகாந்தையே ஓரம் கட்டியது அரசியல். அதனால் அரசியல் களத்தை விஜய் சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது என சிலர் அக்கறையுடன் அறிவுரையும் வழங்கியுள்ளனர்.