அண்ணா பல்கலைக்கழகம் புது ரூல்ஸ்… பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்… தன்னாட்சி அந்தஸ்து கஷ்டம் தான்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனருமான அறிஞர் அண்ணாவின் பெயரை தாங்கி உயர்கல்விக்கு மகுடம் சூட்டும் தலைநகரில் உயர்ந்து நிற்கிறது அண்ணா பல்கலைக்கழகம். இதன்கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அந்தஸ்து பெறுவதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.

​அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை​அதன் வரம்பை சமீபத்தில் உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மாணவர்கள் சேர்க்கை, தேர்ச்சி சதவீதம், கல்வி பணியில் சராசரி அனுபவம், ஆராய்ச்சி சார்ந்த வெளியீடுகள் ஆகியவற்றின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமெனில், கடந்த 5 ஆண்டுகளில் முதலாமாண்டு இளங்கலை படிப்பில் 70 சதவீத மாணவர் சேர்க்கை இருப்பது அவசியம்.​தன்னாட்சி அந்தஸ்து​முன்னதாக 60 சதவீத சேர்க்கை இருந்தால் போதும். இந்த ஒற்றை விதிமுறையால் பல கல்லூரிகளின் தன்னாட்சி அந்தஸ்து இல்லாமல் போய்விடும் என்கின்றனர். இதேபோல் கல்வி நிறுவனத்தின் H-Index குறியீடு 10ல் இருந்து 20ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரிவுரையாளர்களின் சராசரி பணு அனுபவம் 4 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகள்மேலும் ஒவ்வொரு துறையிலும் கடந்த 5 ஆண்டுகளில் 70 சதவீத தேர்ச்சி சதவீதம் முக்கியம். முன்பு 3 ஆண்டுகள் மட்டும் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டன. மேலும் அனைத்து துறைகளிலும் ஆசிரியர் – மாணவர்கள் விகிதாச்சாரம் என்பது 1:20 ஆக இருக்க வேண்டும். 75 சதவீத இளங்கலை படிப்புகளில் ஒரு பேராசிரியர், இரண்டு இணை பேராசிரியர்கள், 6 துணை பேராசிரியர்கள் (1:2:6) என இருக்க வேண்டும்.​துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கருத்து​இவ்வாறு புதிய விதிமுறைகளின் காரணமாக டாப் லெவலில் இருக்கும் கல்லூரிகள் மட்டுமே தன்னாட்சி அந்தஸ்து பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தரமான கற்றலுக்கு, திறமையான மாணவர்கள் உருவாக்கத்திற்கு, வளமான எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
​பொறியியல் கல்லூரிகளுக்கு வந்த சிக்கல்தற்போதைய நிலவரப்படி, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு கல்லூரிகளாக இருக்கும் 446ல் 90 கல்லூரிகள் தன்னாட்சி அந்தஸ்து பெற்று விளங்குகின்றன. இந்த கல்லூரிகள் புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை எனில் உடனடியாக தன்னாட்சி அந்தஸ்து திரும்ப பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கெடுபிடி ஆரம்பம்இதன்மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைகள் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளை விட கெடுபிடியாக இருப்பதாக பேராசிரியர்கள் பலரும் கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தன்னாட்சி பெற்ற கல்லூரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது கவனிக்கத்தக்கது.
​எதற்காக இந்த நடவடிக்கை?இதனால் தரமற்ற கல்லூரிகளும் தன்னாட்சி பெறும் நிலை ஏற்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் கருதியிருக்கலாம். அதன் விளைவாக தான் இப்படி ஒரு நடவடிக்கையோ? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.