சென்னை: கணவர் தினேஷ் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக நடிகை ரச்சித்தா கூறியது பொய் என தெரியவந்ததால், மாங்காடு போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பியதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
பெங்களுரைத் சேர்ந்த நடிகை ரச்சித்தா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இவர் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பிரிவுக்கான காரணம் தெரியவில்லை.
கணவர் மீது புகார்: இதையடுத்து கடந்த வாரம் நடிகை ரச்சிதா மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், நான் கணவர் தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். அவர் தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புகிறோர் மேலும், போன் செய்து மிரட்டுகிறார் என்று புகார் அளித்திருந்தார்.
நடிகர் தினேஷ் விளக்கம்: இந்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் தினேசை விசாரணைக்கு அழைத்து விசாரித்தனர். அப்போது நடிகர் தினேஷ் நாங்கள் இருவரும் சில கருத்து வேறுபாடுகளால் தான் பிரிந்து இருக்கிறோம். சட்டப்படி நாங்கள் இன்னும் பிரியவில்லை, வேண்டுமானால், ரச்சிதா விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் என கூறியதாக இணையத்தில் செய்தி பரவியது.
விசாரித்த போலீசார்: இந்நிலையில் ரச்சித்தா, தினேஷ் விவகாரம் குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், யூடியூப் சேனலில் பேசி உள்ளார். அதில், மாங்காடு போலீசார் தினேஷை அழைத்து விசாரித்தபோது, நான் ஆபாசமாக மெசேஜ் அனுப்பவில்லை என கூறியுள்ளார். இதையடுத்து, ரச்சிதாவின் செல்போனை போலீசார் பரிசோதனை செய்த போது, தினேஷிடம் இருந்து எந்த ஆபாச மெசேஜும் வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.
வசமாக சிக்கி ரச்சித்தா: இதையடுத்து ரச்சிதாவிடம் பேசிய போலீசார், இதுபோல் பொய்யான புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுத்துவிடுவேன் என சொன்னதும் பதறிப்போன ரச்சிதா, தன் வழக்கறிஞர் தான் இவ்வாறு புகார் அளிக்க சொன்னார். இப்படி புகார் அளித்தால் தான் விவாகரத்து கிடைக்கும் என சொன்னார். அதனால் தான் அப்படி செய்தேன் என கூறியுள்ளார். அப்போ விவாகரத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வியா என ரச்சிதா காவல்துறை அதிகாரி செமயாக திட்டியதாக பயில்வான் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.