நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கேரளாவில் கடந்த மாதம் 8 ஆம் தேதி பருவமழை தொடங்கியது. தாமதமாக பருவமழை தொடங்கிய நிலையில் சொல்லிக்கொள்ளும் படி எங்கேயும் பெரிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 23 சதவீதம் குறைவாகவே இருந்தது.
வட மாநிலங்களிலும் பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில் பிபர்ஜாய் புயலால் அதற்கு முன்னதாகவே ஓரளவுக்கு மழையை பெற்றது. இந்நிலையில் ஜூலை மாதத்தின் தொடக்கத்திலேயே பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கேரளா மற்றும் கடலோர கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நடப்பு பருவமழை காலத்தில் முதல் முறையாக கேரளாவுக்கு அதி கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சூப்பரு… முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்… யாருக்கெல்லாம் பயன்?
கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. மேலும் வரும் வாரத்தில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தட்சிண கன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு, ஷிவமோக்கா மற்றும் உத்தர கன்னட மாவட்டங்களுக்கு “ஆரஞ்சு” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் பெங்களூரில் இருக்கும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம் பெங்களூரூவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தாவணகெரே மற்றும் குடகு மாவட்டங்களுக்கும் “மஞ்சள்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட உள் கர்நாடகத்தின் சில பகுதிகள், கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு உள்துறை கர்நாடகாவில் பெரும்பாலான இடங்களில் மழை பொழிவு அதிகம் இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட்… கேரளாவை புரட்டிப்போடும் பருவமழை… 3 மாவட்டங்களில் விடுமுறை!
மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் ஓரிரு இடங்களில் மின்னல் ஏற்படக்கூடும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மணிக்கு 30 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிமீ வேகம் முதல் 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
இதேபோல் மும்பையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதேநேரத்தில் இந்திய வானிலை மையம் புனேவுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில்… சென்னையில் இருந்து இனிமே எவ்ளோ நேரம் தெரியுமா?