சென்னை: யூடியூபர் டிடிஎஃப் வாசனின் கார் பைக்கில் சென்றவர்கள் மீது மோதியதால் அவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூரை சேர்ந்தவரான வாசன் பைக்கில் லடாக் பைக்கில் பயணம் செய்த வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டு பிரபலமானார்.
பைக்கின் மீது தீராத காதல் கொண்ட இன்றைய 2கே கிட்ஸ்கள், டிடிஎஃப் வாசன் என்ன போட்டாலும், அதை ரசித்து பார்க்க ஒரு கூட்டமே இருக்கு. இதனால், யூடியூபில் மிகவும் பிரபலமாக இருக்கிறார் வாசன்.
டிடிஎஃப் வாசன்: யூடியூபில் பிரபலமாக இருக்கும் டிடிஎஃப் வாசனை மேலும் பிரபலமாக்கியது வழக்குகள் தான். சில வருடங்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டன நினைத்த வாசன், சென்னை டெக்காட் லாண்டில் மீட்-அப் ஒன்றை வைத்தார். இந்த மீட்டுக்கு முறைப்படி அனுமதி பெறவில்லை. மேலும்,டிடிஎஃப் வாசனை பார்க்கும் ஆர்வத்தில், கூட்டம் கூட்டமாக இளசுகள் படையெடுத்தால், அந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதை அடுத்து வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அடுத்தடுத்த வழக்கு: வாசனின் பிறந்தநாளின் நடந்த இந்த சம்பவத்தால் தமிழகம் முழுவதும் ஒரு நாளில் பிரபலானார். அதன்பின், டிடிஎஃப் வாசன் எது செய்தாலும் இணையத்தில் வைரலானது. பைக்கில் அதிவேகமாக சென்றது, பொது இடத்தில் கூட்டத்தை கூட்டியது, ஜிபி முத்துக்கு மரண பயத்தை காட்டியது என பல காரணங்களாக போலீசாரின் தண்டனைக்கு உள்ளானார் டிடிஎஃப் வாசன்.
மஞ்சள் வீரர்: பல்வேறு சர்ச்சைகளால்பிரபலமான டிடிஎஃப் வாசனுக்கு சினிமா வாய்ப்பு கதவைத் தட்டியது. அந்த வகையில் டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அவரது பிறந்தநாளான வருகிற ஜூன் மாதம் 29 ம் தேதி வெளியானது. அந்தப்படத்திற்கு மஞ்சள் வீரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
#TTF vasan car accident pic.twitter.com/K7HviTBY9V
— SUBRAMANIAN.R (@subukarthik18) July 4, 2023
விபத்தில் சிக்கிய கார்: யூடியூபில் பிரபலமாக இருக்கும் டிடிஎஃப் வாசனை விடாத கறுப்பாக பிரச்சனை சுற்றிக்கொண்டு இருக்கும் நிலையில், சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் இன்று காலை டிடிஎஃப் வாசன் வந்த கார், பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் பயணம் செய்தவர் காயம் அடைந்தார். இதனால்,வாசன் காரை அங்கேயே விட்டுவிட்டு ஆட்டோவில் ஏறி சென்றுவிட்டார். பின் சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் போக்குவரத்து காவலர்கள் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.