"பாரத் மாதா கீ ஜே சொன்னா அடிப்பீங்களா?".. கொதித்தெழுந்த நாராயணன் திருப்பதி..

சென்னை:
தென்காசியில் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கொதித்து எழுந்திருக்கிறார்.

தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரத்தில் நேற்று இரவு

சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டு பேசினார். இதனைத் தொடர்ந்து, பொதுக்கூட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியாக காரில் சென்ற பாஜகவினர், திமுகவினரை பார்த்து ‘பாரத் மாதா கீ ஜே’ என்று கோஷமிட்டபடி சென்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் அந்தக் காரை விரட்டிச் சென்று மடக்கினர். பின்னர் காரில் இருந்தவர்களை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர். மேலும், அவர்களின் காரையும் அடித்து நொறுக்கினர். அங்கிருந்த போலீஸார் இதை தடுக்க முயன்றும் திமுகவினர் ஆக்ரோஷமாக இருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதையடுத்து, கூடுதல் போலீஸார் அங்கு வந்து அடி வாங்கிக் கொண்டிருந்த பாஜகவினரை மீட்டனர்.

அப்போது அவர்கள், தங்களை தாக்கிய திமுகவினர் மீது புகார் கொடுக்க விரும்பவில்லை என்று கூறி அங்கிருந்து சென்றனர். இதனிடையே, பாஜகவினர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “பாரத் மாதா கி ஜே என்றால் இந்திய அன்னை வாழ்க என்று பொருள். அதை சொன்னதற்காக அடித்து உதைத்து கலவரம் செய்வது ஏன்? உணர்வுகளுக்கு மரியாதை இல்லாதது ஏன்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.