பியூட்டி பார்லர்களுக்கு தடை… பிழைப்பு போச்சு… தலிபான் உத்தரவால் பெரிய சிக்கலில் ஆப்கன் பெண்கள்!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் சர்வதேச அளவில் முன்வைக்கப்பட்டுகின்றன. குறிப்பாக ஆப்கானிஸ்தான் பெண்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வரிசையில் புதிதாக ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளை இஸ்லாமிய பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.

பியூட்டி பார்லர்களுக்கு தடை

அதாவது, காபூல் உள்ளிட்ட அனைத்து மாகாணங்களிலும் பெண்கள் நடத்தும் பியூட்டி பார்லர்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அனைத்து பியூட்டி பார்லர்களின் லைசென்சும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இது அந்நாட்டு பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பற்றி எரியும் பிரான்ஸ்… மேயர் வீட்டுக்குள் காரை விட்டு மோதிய கலவரக்காரர்கள்… அடுத்த நடந்த ஷாக்!

பெண்கள் பெரிதும் வேதனை

எங்களின் வாழ்வாதாரத்திற்காக பியூட்டி பார்லர்கள் நடத்தி வருகிறோம். இப்படி திடீரென தடை உத்தரவு பிறப்பித்தால் நாங்கள் என்ன செய்வது? ஆண்கள் பலரும் வேலையின்றி கிடக்கின்றனர். அவர்களால் தற்போது குடும்பத்தை காப்பாற்ற முடியாது. இதனால் பெண்கள் தான் பிழைப்பு நடத்தி வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

இனிமேல் எப்படி வாழ்வது?

தற்போது அதற்கு வேட்டு வைக்கும் வகையில் தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இனிமேல் நாங்கள் எப்படி உயிர் வாழ்வோம்? ஒரு ரொட்டி துண்டு கூட வாங்க முடியாது என்று பெண்கள் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். முன்னதாக மாணவிகள் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

வெறும் ரூ.495 பேனா… அழியுற இங்க்… இதெல்லாம் நியாயமா ரிஷி சுனக்? பிரிட்டனில் வெடித்த பெரிய சர்ச்சை!

தலிபான்கள் போட்ட தடை உத்தரவுகள்

பெண்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றவும் தடை செய்யப்பட்டது. பூங்காக்கள், சினிமாக்கள் மற்றும் புத்துணர்ச்சி மையங்கள் ஆகியவற்றுக்கும் செல்ல பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தலிபான் விதிக்கும் கட்டுப்பாடுகள் சர்வதேச அளவில் கடும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது.

ஐ.நா சபை என்ன செய்கிறது?

ஆனால் எந்த ஒரு நாடும் தலிபான்களை எதிர்த்து கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை. ஐ.நா சபை உரிய நடவடிக்கை எடுத்து ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு விடிவு காலம் பிறக்க ஏற்பாடு செய்யாதா? எனப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.