மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் மினுஸ்மா பணிகளில் 4 வது இலங்கை அமைதிகாக்கும் படைக்குழு அவர்களின் சேவைக்காலம் நிறைவடைந்து நேற்று (3) நாடு திரும்பியுள்ளனர்.
முதல் கட்டத்தின் போது, 6 அதிகாரி மற்றும் 155 சிப்பாய்கள் நாடு திரும்பியதுடன் ஏனையோர் 5 வது படைக்குழு பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பிறகு நாடு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
14 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எம்.ஆர்.என்.கே.ஜெயமன்ன ஆர்டப்ளியுபீ, கெமனு ஹேவா படையணி நிலைய தளபதி பிரிகேடியர் டப்ளியூபிஜேகே விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ, அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவர்களை வரவேற்றனர்.
4 வது அமைதி காக்கும் படைக்குழுவில் 20 அதிகாரிகள் மற்றும் 223 சிப்பாய்கள் அடங்குவர். இந்த கெமுனு ஹேவா படையணி படையினர்கள் குழு 23 மே 2022 அன்று மாலிக்கு சென்றனர்.