சென்னை: விஜய் டிவியின் முக்கியமான சீரியல்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா 2 சீரியல் காணப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த சீரியல் துவங்கப்பட்டது.
முன்னதாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவந்த பாரதி கண்ணம்மா தொடர் முடிக்கப்பட்ட நிலையில் சில தினங்களிலேயே சீரியலின் இரண்டாவது சீசன் துவங்கப்பட்டது.
முற்றிலும் மாறுபட்ட கிராமத்து கதைக்களத்தில் இரண்டாவது சீசனின் அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
பாரதி கண்ணம்மா 2 தொடரின் ப்ரமோவால் ரசிகர்கள் அதிர்ச்சி: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது பாரதி கண்ணம்மா 2 தொடர். இந்தத் தொடரின் முதல் பாகம் கடந்த சில வருடங்களாக சேனலில் ஒளிபரப்பாகி வந்தது. முதலிடத்தையும் பிடித்திருந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தத் தொடர் நிறைவு பெற்றது. தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் இடம்பெற்றிருந்த கேரக்டர்களின் பெயர்கள் மட்டுமே இந்த இரண்டாவது சீசனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மற்றபடி முதல் சீசனுக்கும் இரண்டாவது சீசனுக்கும் சற்றும் சம்பந்தமேயில்லாமல், இரண்டாவது சீசன் முற்றிலும் மாறுபட்ட கிராமத்து கதைக்களத்தில் தற்போது பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. பொறுப்பில்லாமல் சுற்றிவரும் கிராமத்து இளைஞனாக பாரதியாக இந்தத் தொடரில் ரோஜா சீரியல் புகழ் சிபு சூரியன் நடித்து வருகிறார். கண்ணம்மாவாக கடந்த சீசனில் நடித்த வினுஷாவே நடித்து வருகிறார்.
மேலும் வெண்பா, சவுந்தர்யா கேரக்டர்களும் இந்த சீரியலில் உள்ளது. இந்த சீரியலிலும் முக்கியமான வில்லி கேரக்டர் வெண்பாதான். அந்த வகையில், தன்னுடைய அத்தை மகன் பாரதியை கரம்பிடித்து, அவரது செல்வ செழிப்பை அனுபவிக்கும் நோக்கத்தில் வெண்பா சதித் திட்டங்களை தீட்டுகிறார். அதற்கு அவரது அத்தையும் பலியாகிறார். முன்னதாக தீவிபத்து ஒன்றில் வெண்பா, தன்னை காப்பாற்ற, அவரை தெய்வமாக பார்க்கிறார் சவுந்தர்யா. இந்த தீவிபத்தில் தன்னுடைய முகத்தில் ஏற்பட்ட காயத்தை பகடைக்காயாக பயன்படுத்துகிறார் வெண்பா.
இந்நிலையில், முகத்தில் தீக்காயம் பட்ட வெண்பாவிற்காக சவுந்தர்யா மாப்பிள்ளை பார்க்க, வருபவர்கள் எல்லாம் அவரது தீக்காயத்தை சுட்டிக்காட்டி நிராகரிக்கின்றனர். இதனால் விரக்தியடைவதாக காட்டிக் கொள்ளும் வெண்பா, தற்கொடை நாடகத்தை அரங்கேற்றுகிறார். இதனால் மனவருத்தமடையும் சவுந்தர்யா, தன்னுடைய மகன் பாரதிக்கும் வெண்பாவிற்கும் திருமணம் நடத்தி வைப்பேன் என்று உறுதி அளிக்கிறார்.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி என்று எண்ணும் வகையில், தன்னுடைய அம்மா மற்றும் அண்ணனுடன் குதூகலிக்கிறார் வெண்பா. இதனிடையே, ஏழை பெண்ணான கண்ணம்மாவின் காதலை தொடர்ந்த அடுத்தடுத்த முயற்சிகளுக்கு பிறகு பெறும் பாரதியிடம், வெண்பாவை நிச்சயம் செய்வதாக தான் வாக்கு கொடுத்துவிட்டதாக கூறுகிறார் சவுந்தர்யா. இதனால் அதிர்ச்சிக்குள்ளாகும் பாரதி, அதை மறுக்கிறார்.
இதனால் ஆத்திரத்திற்குள்ளாகும் பாரதியின் அம்மா சவுந்தர்யா, பாரதியை மிரட்டி பணிய வைக்கிறார். வெண்பாவுடன் நிச்சயதார்த்தம் செய்துக் கொள்ளாவிட்டால் தான் தற்கொலை செய்துக் கொள்வதாக மிரட்டுகிறார். தொடர் மிரட்டலையடுத்து வெண்பாவை திருமணம் செய்துக் கொள்ள சம்மதிக்கிறார் பாரதி. அவர்களின் நிச்சயதார்த்தமும் சிறப்பாக நடந்தேறுகிறது. இதனிடையே, இந்த நிச்சயதார்த்தம் குறித்து கண்ணம்மாவிற்கும் தெரியவருவதாக இந்த வார ப்ரமோ காணப்படுகிறது.