வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :பா.ஜ., – எம்.பி., பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான, ‘போக்சோ’ வழக்கை ரத்து செய்ய பரிந்துரைத்து புதுடில்லி போலீசார் அளித்துள்ள இறுதி அறிக்கை மீது பதில் அளிக்கும்படி, புகார் அளித்த சிறுமி தரப்புக்கு டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
பா.ஜ., – எம்.பி.,யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் ஏழு பேர் பாலியல் புகார் தெரிவித்தனர். அதில் ஒருவர், 18 வயதுக்கு குறைவான சிறுமி என்பதால், ‘போக்சோ’ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
‘இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி, ஜூன் 15க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ என, மத்திய அரசு உறுதி அளித்ததை
அடுத்து, மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் ஒரு வீரர் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினர்.இந்நிலையில், கடந்த மாதம் 15ம் தேதி, புதுடில்லி போலீசார் தங்கள் இறுதி விசாரணை அறிக்கையை புதுடில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.இதில், சிறுமி மீதான பாலியல் அத்துமீறலை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இல்லாததால், ‘போக்சோ’ வழக்கை மட்டும் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டது. மற்ற ஆறு பெண்கள் அளித்துள்ள பாலியல் புகார் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து, போலீஸ் தரப்பு பரிந்துரையை ஏற்பதா அல்லது மேற்கொண்டு விசாரணையை தொடர உத்தரவிடுவதா என்பது குறித்து நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.இந்நிலையில், போலீசார் அளித்துள்ள பரிந்துரையின் மீது பதில் அளிக்கும்படி சிறுமியின் தரப்புக்கு டில்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement