KH233: கடைசி நேரத்தில் விலகிய உதயநிதி…அதிரடி முடிவு எடுத்த ஆண்டவர்..KH233 பின்னணி இதுதான்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியின் மூலம் புது உத்வேகம் பெற்றுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று கமலை வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தது. இப்படம் கொடுத்த வெற்றியினால் உலகநாயகன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டானார்.

அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் துவங்கப்பட்டு பின்பு பல பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 படத்தை மீண்டும் துவங்கினார்
கமல்
. மேலும் நடிப்பது மட்டுமல்லாமல் தன் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக பல படங்களை தயாரிக்கவும் துவங்கினார் கமல்.

கமல் 233

அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம், சிம்புவின் நடிப்பில் ஒரு படம் என இரு படங்களை மிகப்பிரமாண்டமாக தயாரித்து வருகின்றார் உலகநாயகன். இந்நிலையில் தன் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக உதயநிதியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை தயாரிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார் கமல்.

Maamannan: மாமன்னன் படத்தின் ஐந்தாம் நாள் வசூல் விவரம்..கெத்து காட்டும் உதயநிதி..!

ஆனால்
உதயநிதி
அமைச்சராக பேறுபெற்ற பின்னர் இனி நடிக்கமாட்டேன் என முடிவெடுத்து கமலின் படத்தில் இருந்து விலகினார். இவ்வளவு பெரிய வாய்ப்பை உதயநிதி மிஸ் செய்துவிட்டாரே என ரசிகர்கள் ஒருபக்கம் பேசி வர மறுபக்கம் உதயநிதிக்கு பதிலாக அப்படத்தில் யார் நடிப்பார் என்ற பேச்சும் பரவலாக பேசப்பட்டு வந்தது.

அதிகாரபூர்வ அறிவிப்பு

முதலில் உதயநிதி ஹீரோவாக நடிக்க இருந்த படத்தின் இயக்குனர் யார் என்பதே தெரியாமல் கமல் மிகவும் சீக்ரட்டாக வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது கமல் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் தன் 233 ஆவது படத்தில் நடிக்கப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் கமல்.

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் சிலர் உதயநிதி நடிக்க வேண்டிய படத்தில் தற்போது கமலே சில மாறுதல்களை செய்து நடிக்க இருப்பதாக பேசி வருகின்றனர். ஆனால் இதில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை. இருப்பினும் கமல் 233 திரைப்படம் உதயநிதி நடிக்கவேண்டிய படமாக கண்டிப்பாக இருக்காது என கூறி வருகின்றனர்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

ஏனென்றால் கமல் மற்றும் வினோத் இணைய இருப்பதாக கடந்த பல மாதங்களாகவே செய்திகள் வலம் வந்தன. அவ்வாறு இருக்கையில் இது உதயநிதி நடிக்கவேண்டிய படமாக இருக்காது என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் இன்றுவரை உதயநிதி நடிப்பில் உருவாக இருந்த படத்தை யார் இயக்குவதாக இருந்தார், இப்படம் வேறொரு ஹீரோவை வைத்து துவங்கப்படுமா என்பது பற்றி எந்த தகவலும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.