Maamannan:மாமன்னன் வடிவேலுவின் மனைவி: 50 வயதில் நடிக்க வந்த பெரிய வீட்டு மருமகள்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
மாரி செல்வராஜ் இயக்கத்தில்
உதயநிதி ஸ்டாலின்
நடிப்பில் கடைசியாக வெளியான மாமன்னன் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. மாமன்னன் விரைவில் ரூ. 50 கோடி வசூலை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
அந்த படத்தில் மாமன்னனாக நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் வடிவேலு. அவரின் மனைவி வீராயியாக நடித்திருந்தார் கீதா கைலாசம்.

மறைந்த இயக்குநர் கே. பாலசந்தரின் மகன் கைலாசத்தின் மனைவி தான் இந்த கீதா. பாலசந்தர் வீட்டில் இருந்து யாரும் நடிக்க வரவில்லை. தன் சிஷ்யன் கமல் ஹாசன் கேட்டுக் கொண்டதால் உத்தம வில்லன் படத்தில் நடித்தார் பாலசந்தர்.

இந்நிலையில் அவர் வீட்டு மருமகள் நடிக்க வந்திருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜியின் வீட்ல விசேஷங்க படத்தில் நர்ஸாக நடித்தார் கீதா. மேலும் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியாரின் மனைவியாக நடித்தார். அந்த இரண்டு படங்களிலும் கீதாவை ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் மாமன்னன் படத்தில் கீதாவின் நடிப்பை ரசிகர்கள் கண்டுகொண்டார்கள். அவர் தன் 50வது வயதில் நடிக்க வந்தார்.

தன் மாமனாரின் கவிதாலயா நிறுவனத்தை மேற்பார்வையிட்டு வந்தார் கீதா. தியேட்டர் கலைஞராக இருந்த கீதாவுக்கு அண்மையில் தான் பட வாய்ப்புகள் கிடைக்கத் துவங்கியது. படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை கீதாவுக்கு இல்லை.

மாமன்னனில் வடிவேலு மனைவியாக நடித்தவர் பெரிய இடத்து மருமகள்னு தெரியுமா?

மகள் அளித்த தைரியத்தில் தான் நடிக்க வந்திருப்பதாக கீதா கைலாசம் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடிக்க வேண்டும் என மாரி செல்வராஜ் கூறியதை கேட்டு முதலில் பயந்திருக்கிறார் கீதா.

படப்பிடிப்பு தளத்திற்கு வந்து வடிவேலுவுடன் சேர்ந்து நடித்தது சவாலாக இருந்ததாக கூறினார். கிளைமாக்ஸ் காட்சியில் தான் கட்டிலுக்கு அடியில் ஒளிந்ததற்கு ரசிகர்கள் பாராட்டினார்கள் என கூறி சந்தோஷப்பட்டார் கீதா.

Maamannan:வடிவேலுவுக்கு மாமன்னன் ஏன் இந்த அளவுக்கு ஒர்க்அவுட் ஆச்சுனு தெரியணுமா?

மாமன்னன் படம் பார்க்கும் அனைவரும் வடிவேலுவை தான் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவரின் மகன் அதிவீரனாக நடித்த உதயநிதி ஸ்டாலினும் கவனம் ஈர்த்துள்ளார். ஆனால் ஹீரோயினாக நடித்த கீர்த்தி சுரேஷை யாரும் கண்டுகொள்ளவில்லை.

இது என்னய்யா எங்க தலைவிக்கு வந்த சோதனை என கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். கீர்த்திக்கு பெரிதாக வேலை இல்லை. கொடுத்த வேலையை அவர் கச்சிதமாக செய்திருக்கிறார். அவ்வளவு தான்.

மாமன்னன் படம் பார்த்த ரசிகர்கள் மட்டும் அல்ல பிரபலங்களும் சமூக வலைதளங்களில் அதை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் வித்தியாசமான படங்களை கொடுப்பதற்கு பெயர் போன ராஜு முருகன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் உரிமைக்கான குரலை உயரப் பறக்க விடுகிறான் மாமன்னன்..!

எப்போதும் போல மாரி செல்வராஜ் கலை நோக்கத்திற்கு கைத்தட்டலும் அன்பும். திரை சபைக்கு இந்த சபாநாயகரை அழைத்து வந்ததற்காக உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்.

சிறந்த ஒளியை தந்திருக்கிற நண்பன் தேனி ஈஸ்வர், வரிகளின் மூலம் கதையை கடத்தி இருக்கிற அண்ணன் யுகபாரதி, சிறப்பான நடிப்பை தந்திருக்கும் #Vadivelu, #FahadhFaasil, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்..! என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.