ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
மாரி செல்வராஜ் இயக்கத்தில்
உதயநிதி ஸ்டாலின்
, வடிவேலு உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் படம் பக்ரீத் திருநாள் அன்று ரிலீஸானது. பெரிய பட ரிலீஸ் எதுவும் இல்லாத நேரத்தில் சோலோவாக வந்து வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.
உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
நம்ம அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாம்யா. தியேட்டரில் பார்த்துட்டு வந்துவிடுவோம் என பலரும் தியேட்டருக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் மாமன்னன் படம் பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்த யூடியூப் பிரபலமான காத்து கருப்பு கலையிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
படத்தில் நெகட்டிவாக தெரிந்தது வந்து ஆபோசிட்ல ஒருத்தி உட்கார்ந்திருந்தா. பாப்கார்ன் தின்னுகிட்டு, சீட்டை இப்படி அப்படி நகர்த்திக்கிட்டு. எரிச்சலாவுது. அப்பொழுது தான் முக்கியமான சீன் வந்திருக்கு. படத்தில் சேருல உட்காரு உட்காருனு சொல்லும்போது. அது தான் மெயினான சீனாக போய்க் கொண்டிருக்கிறது.
சேரில் உட்காருவாங்களா மாட்டாங்களானு. அங்க முன்னாடி ஒருத்தி பாப்கார்னு சாப்பிட்டுக் கொண்டு, சேர்ல உட்கார மாட்டேனுகிறா. இங்க ஆடுறா, அங்க ஆடுறா, கால உள்ளே விடுறா. எனக்கு அது தான் படத்தில் பெரிய மைனஸா தெரிந்தது என்றார்.
அந்த வீடியோவை ஒருவர் ட்விட்டரில் வெளியிட அதை பார்த்த உதயநிதி ஸ்டாலின் சிரித்துவிட்டார். அந்த வீடியோவை பார்த்தால் யாருக்கு தான் சிரிப்பு வராது. படத்தில் இப்படியொரு மைனஸ் இருக்கும் என்று மாரி செல்வராஜ் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.
மாமன்னன் படம் ரிலீஸானதில் இருந்தே ட்விட்டரில் அதை பற்றி தான் பேச்சாக உள்ளது. உதயநிதி ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறார். மாமன்னன் குறித்து யாராவது பாராட்டினால் நன்றி தெரிவிக்கிறார். இது போன்ற வித்தியாசமான வீடியோக்கள், ட்வீட்டுகள் வந்தாலும் பதில் அளிக்கிறார்.
Maamannan:வடிவேலுவுக்கு மாமன்னன் ஏன் இந்த அளவுக்கு ஒர்க்அவுட் ஆச்சுனு தெரியணுமா?
இந்நிலையில் மாமன்னன் படம் பார்த்துவிட்டு பாராட்டி ட்வீட் போட்டார் இயக்குநர் பா. ரஞ்சித். அதை பார்த்த உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார். அவர் ட்விட்டரில் கூறியதாவது,
`மாமன்னன்’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் – ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும்.
அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம்.
ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி’யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார்.
`பராசக்தி’யில் தொடங்கி `மாமன்னன்’ வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி’யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம்.
ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட.
Maamannan:மாமன்னன் வடிவேலுவின் மனைவி: 50 வயதில் நடிக்க வந்த பெரிய வீட்டு மருமகள்
ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்.
இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி என்றார்.