Thangalaan: கனவு நனவானது.. 'தங்கலான்' படத்தின் வெறித்தனமான அப்டேட் வெளியிட்ட விக்ரம் .!

விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘தங்கலான்’. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தப்படம் தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட ரிலீசாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் ‘தங்கலான்’ குறித்து நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
‘பொன்னியின் செல்வன்’ வெற்றியை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படமாக ‘தங்கலான்’ உருவாகி வருகிறது. தனது படங்களின் வாயிலாக தொடர்ச்சியாக சமூகநீதி குறித்து பேசி வரும் பா. ரஞ்சித் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் கடைசியாக ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் வெளியானது. நிகழ்கால காதல் குறித்து பல்வேறு கோணங்களை இந்தப்படம் அலசி ஆராய்ந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படத்தை தொடர்ந்து ‘தங்கலான்’ படத்தினை இயக்க ஆரம்பித்தார் ரஞ்சித். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் ஷுட்டிங் ஒத்திகையின் போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார் விக்ரம். இதனால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு முழு ஓய்வில் இருந்து வந்தார். இதனையடுத்து அண்மையில் அவரின் உடல்நிலை சரியானதை தொடர்ந்து ‘தங்கலான்’ படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டது.

இந்நிலையில் ‘தங்கலான்’ படப்பிடிப்பு ஒட்டுமொத்தமாக நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விக்ரம், ‘இத்துடன் நிறைவடைந்தது. என்ன ஒரு பயணம்.! மிகவும் அற்புதமான நபர்களுடன் இப்படத்தில் பணிபுரிந்துள்ளேன். நடிகராக உற்சாகமான அனுபவங்களை பெற்றுள்ளேன்.

Sivakarthikeyan: ‘எஸ்கே 21’ படத்தில் விஸ்வரூபம் நடிகரா.?: இவர் கொடூரமான ஆளாச்சே.!

இங்கே நான் பகிர்ந்துள்ள போட்டோவுக்கும் கடைசி புகைப்படத்திற்கும் இடையே வெறும் 118 வேலை நாட்கள் தான் இருந்தது.இந்த கனவை உண்மையாக்கியதற்காக ரஞ்சித்துக்கு ஒவ்வொரு நாளும் நன்றி என பதிவிட்டுள்ளார்.அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவில் ஷுட்டிங் ஆரம்பித்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தற்போது நிறைவடையும் போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் விக்ரம்.

‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன் பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ‘தங்கலான்’ படத்தை கேஜிஎப் குறித்த உண்மை வரலாற்றை கூறும் விதமாக பா. ரஞ்சித் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஐயா தலைவா… எவ்வளவு நாளாகிருச்சு: மாமன்னனுக்காக ஏ.ஆர். ரஹ்மானை சிலாகித்த பிரபல இயக்குனர்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.