டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், 125cc சந்தையில் ரைடர் பைக் மாடலின் என்ஜின், சிறப்புகள், மைலேஜ் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். ஒரு மாடலை மட்டுமே மூன்று விதமான வேரியண்ட் ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
125cc சந்தையில் உள்ள ஹோண்டா ஷைன் 125, எஸ்பி 125, ஹீரோ கிளாமர் 125, சூப்பர் ஸ்பிளெண்டர், பல்சர் 125, பல்சர் என்எஸ் 125, மற்றும் CT 125X ஆகிய மாடல்களுடன் நேரடியாக சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்றது.
2023 TVS Raider 125cc
டிவிஎஸ் ரைடர் 124.8cc, சிங்கிள் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் மூன்று வால்வுகளை பெற்றுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 7,500RPM-ல் 11.2 bhp பவர், 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. ஐந்து வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 52 கிமீ முதல் 56 கிமீ வரை கிடைக்கின்றது.
சஸ்பென்ஷன் பொறுத்தவரை, டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்கு மற்றும் சரிசெய்யக்கூடிய பின்புற மோனோ ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. 17-இன்ச் அலாய் வீல்கள் கொண்டுள்ள இந்த பைக்கில் 80/100-பிரிவு முன்புற டயரும் மற்றும் 100/90-பிரிவு பின்புற டியூப்லெஸ் டயர் கொண்டுள்ளது.
முன்புற டயரில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புற டயரில் 130 மிமீ டிரம் இணைக்கபட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை கொடுத்துள்ளது.
டாப் வேரியண்ட் மாடலாக உள்ள SX வேரியண்டில் மஞ்சள், கருப்பு நிறங்களில் SmartXonnect வசதியுடன் கூடிய TFT டிஸ்பிளே பெற்று வாய்ஸ் மற்றும் நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.
ரைடர் 125 Split SEAT மாடலில் மஞ்சள், நீலம், சிவப்பு, மற்றும் கருப்பு நிறங்களில் ரைடிங் மோடுகள், எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றுள்ளது.
இறுதியாக, சிவப்பு நிறத்தில் மட்டும் குறைந்த விலை ஒற்றை இருக்கை வேரியண்டில் ரைடிங் மோடுகள், எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றுள்ளது.
TVS Raider 125 | |
Engine Displacement (CC) | 124.8 cc Air-cooled |
Power | 11.2 hp @ 7500 rpm |
Torque | 11.2 Nm @ 6,000 rpm |
Gear Box | 5 Speed |
2023 டிவிஎஸ் ரைடர் 125சிசி பைக்கின் ஆன்ரோடு விலை பின்வருமாறு –
2023 TVS Raider 125 Single Seat – ₹ 1,17,014
2023 TVS Raider 125 Split Seat – ₹ 1,18,113
2023 TVS RAIDER SX – ₹ 1,26,192
(தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல்)