தமிழகத்தில் இன்றைய தினம் சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னை, திருச்சி சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் 3,000 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கு காட்டாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, திருவள்ளூர் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கணக்கு காட்டவில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் திருச்சி மாவட்ட உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கு காட்டவில்லை என்று வருமான வரி தெரிவித்துள்ளது.