₹ 2.33 லட்சத்தில் ட்ரையம்ப் ஸ்பீட் 400 விற்பனைக்கு வந்தது – Triumph Speed 400 & Scrambler 400 X

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 400cc என்ஜின் பெற்ற ஸ்பீட் 400 மற்றும் ட்ரையம்ப் ஸ்கிராம்பளர் 400X என இரண்டு பைக்குகளும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்றுள்ள ஸ்பீட் 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400X  என இரண்டு மாடல்களும் பொதுவாக ஒரே என்ஜினை பகிர்ந்து கொண்டாலும் பல்வேறு வித்தியாசங்களை மெக்கானிக்கல், டயர், பிரேக்கிங் உள்ளிட்ட அம்சங்களில் மாறுபடுகின்றது.

பஜாஜ்-ட்ரையம்ப் கூட்டணியில் தயாரிக்கப்பட்ட புதிய TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ட்ரையம்ப் ஸ்பீட் 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400x பைக்கின் மைலேஜ் 32 Kmpl வழங்கும்.

ஸ்பீட் 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்கில் ரைடு பை வயர் மற்றும் ஸ்விட்ச் ஆஃப் செய்யக்கூடிய டிராக்ஷன் கட்டுப்பாடு உள்ளது. டிஸ்ப்ளேவில் ஒருங்கிணைந்த எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

புதிய ட்ரையம்ப் ஸ்பீடு ரூ. 2..23 லட்சத்தில் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். அதற்கு பிறகு விலை ரூ.2.33 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.

triumph speed 400 and scrambler 400x launched

ட்ரையம்ப் ஸ்பீட் 400

ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்றுள்ள ஸ்பீட் 400 பைக்கில்  புதிய டியூபுலர் ஸ்டீல் சேஸ் கொண்டுள்ளது. இந்த வடிவமைப்பு சிறப்பான மற்றும் நிலைப்பினை ஏற்படுத்தும் கையாளுதலுக்கான உறுதிப்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது.  790 மிமீ இருக்கை உயரத்துடன், ஸ்பீட் 400 பைக்கின் எடை 170 கிலோ கிராம் ஆக உள்ளது.

43 மிமீ அப்சைடு டவுன் முன் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டு 140 மிமீ பயணத்தை வழங்குகிறது.  பின்பக்கத்தில்130மிமீ பயணக்கின்ற மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன் ஆனது ஸ்பிரிங் ப்ரீலோட் அட்ஜஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிரேக்கிங் பொறுத்தவரை, ட்ரையம்ப் ஸ்பீட் 400 நான்கு பிஸ்டன் ரேடியல் காலிபர் பொருத்தப்பட்டுள்ளது, முன்பக்கத்தில் 300 mm நிலையான டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 230 mm டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

ஸ்பீட் 400 பைக்கின் இரண்டு முனைகளிலும் 17-இன்ச் டயர் பொருத்தப்பட்டு பிரீமியம் மற்றும் ஸ்போர்ட்டியான மெட்ஸெலர் ஸ்போர்ட்டெக் M9RR டயரை பெற்றுள்ளது. இந்த மாத இறுதியில் டீலர்களை வந்தடையும்.

triumph speed 400 and scrambler 400x launched

ட்ரையம்ப் ஸ்கிராம்பளர் 400X

ஆன்-ரோடு மற்றும் ஆஃப் ரோடுக்கு ஏற்ற வகையிலும், ஸ்க்ராம்ப்ளர் 400 x பைக்கில் முன்பக்கத்தில் 19 இன்ச் வீல் மற்றும் 17 இன்ச் அலாய் வீல் பெறுகிறது. மெட்ஸெலர் கரூ ஸ்ட்ரீட் டயர்களுடன் வருகிறது. 790 மிமீ இருக்கை உயரத்துடன், ஸ்கிராம்பளர் 400 x பைக்கின் எடை 186 கிலோ கிராம் ஆக உள்ளது.

மற்றபடி, இந்த மாடல் நான்கு பிஸ்டன் ரேடியல் காலிபர் பொருத்தப்பட்டுள்ளது, முன்பக்கத்தில் 320 mm டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 230 mm டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

43 மிமீ அப்சைடு டவுன் முன் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டு 150 மிமீ பயணத்தை வழங்குகிறது.  பின்பக்கத்தில் 150 மிமீ பயணக்கின்ற மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன் ஆனது ஸ்பிரிங் ப்ரீலோட் அட்ஜஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அக்டோபர் மாதம் முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

.இரண்டு மாடல்களுக்கு இடையிலான வித்தியாசங்கள் அட்டவனையில்

Speed 400  Vs Scrambler 400 X
சேஸ்

ஹைப்ரிட் ஸ்பைன்/பெரிமீட்டர்,

டியூபுலர் ஸ்டீல், போல்ட்-ஆன் ரியர் சப்ஃப்ரேம்

ஸ்விங் ஆர்ம்

இரட்டை பக்க, கேஸ்ட் அலுமினிய அலாய்

முன்பக்க வீல் கேஸ்ட் அலுமினிய அலாய்

10 ஸ்போக், 17 x 3 in

கேஸ்ட் அலுமினிய அலாய்

10 ஸ்போக் 19 x 2.5 in

பின்பக்க வீல் கேஸ்ட் அலுமினிய அலாய்

10 ஸ்போக், 17 x 4 in

கேஸ்ட் அலுமினிய அலாய்

10 ஸ்போக், 17 x 3.5 in

டயர் Metzeler Sportec M9RR Metzeler Karoo Street
முன்புற டயர் 110/70 R17 100/90 R19
பின்புற டயர் 150/60 R17 140/80 R17
முன்புற

சஸ்பென்ஷன்

43mm அப் சைடு டவுன் ஃபோர்க்
140mm wheel travel
43mm அப் சைடு டவுன் ஃபோர்க்
150mm wheel travel
பின்புற

சஸ்பென்ஷன்

மோனோஷாக் ப்ரீ லோட் அட்ஜெஸ்ட்
130mm wheel travel
மோனோஷாக் ப்ரீ லோட் அட்ஜெஸ்ட்
150mm wheel travel
முன்புற பிரேக் 300mm டிஸ்க்
4 பிஸ்டன் ரேடியல் காலிப்பர், ABS
320mm டிஸ்க்

4 பிஸ்டன் ரேடியல் காலிப்பர், ABS

பின்புற பிரேக் 230mm டிஸ்க் ஃபுளோட்டிங் காலிப்பர், ABS 230mm டிஸ்க் ஃபுளோட்டிங் காலிப்பர், ABS

இந்த இரு மாடல்களுக்கு போட்டியாக, ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440, ராயல் என்ஃபீல்டு 350 மற்றும் வரவிருக்கும் ராயல் என்ஃபீல்டு 450 ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

Triumph Speed 400 & Scrambler 400 X Gallery

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.