Leo: லியோ ஷூட்டிங் முடிந்ததும் ரூ. 15 கோடியுடன் வெளிநாடு கிளம்பும் லோகேஷ் கனகராஜ்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
கமல் ஹாசனின் விக்ரம் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் லியோ. தளபதி விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், அர்ஜுன் என ஒரு ஊரே நடித்துக் கொண்டிருக்கிறது.

உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
இந்நிலையில் படப்பிடிப்பு முடியப் போகும் நேரத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப்பையும் அழைத்து வந்து நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறாராம் லோகேஷ் கனராஜ்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

என்னய்யா லோகேஷ், லிஸ்ட்டு ரொம்ப பெருசா போய்க்கிட்டே இருக்கிறதே என விஜய் ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். ஊரில் உள்ள அனைவரும் நடித்தால் விஜய்யின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் என்னவாகும் என்பதே அவர்களின் கலக்கத்திற்கு காரணம்.

இந்நிலையில் தான் லியோ பற்றிய அந்த தகவல் வெளியாகியுள்ளது. லியோவின் வி.எஃப்.எக்ஸ். வேலை சென்னையில் அல்ல மாறாக வெளிநாட்டில் நடக்கவிருக்கிறது. அதற்காக மட்டும் ரூ. 15 கோடியை ஒதுக்கி வைத்திருக்கிறார்களாம்.

வி.எஃப்.எக்ஸ். வேலையை கவனிக்க வெளிநாட்டிற்கு கிளம்புகிறாராம் லோகேஷ் கனகராஜ்.

தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையடுத்து காஷ்மீரில் பேட்ச் ஒர்க் நடக்கிறது. அதை முடித்துக் கொண்டு தான் வெளிநாட்டிற்கு செல்கிறார்.

வி.எஃப்.எக்ஸ். வேலைக்கு மட்டுமே ரூ. 15 கோடியா என பலரும் வியக்கிறார்கள். இதெல்லாம் கேட்க நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் தினமும் ஒரு நடிகர் அல்லது நடிகையை புதிதாக சேர்ப்பது தான் லைட்டா பயமாக இருக்கிறது லோகேஷ் கனகராஜ் என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

இதற்கிடையே லியோ படத்தில் தனுஷும், பிரபல தெலுங்கு நடிகரான ராம் சரணும் கவுரவத் தோற்றத்தில் வருகிறார்கள் என தகவல் வெளியாகி தீயாக பரவியது. விசாரித்துப் பார்த்ததில் அந்த தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

Maamannan: மாமன்னன் படம் ஓடுனால் என்ன, இருந்தா என்ன?, அதா பசியை தீர்க்கப் போகுது?: எடப்பாடி பழனிசாமி

விஜய்யின் லியோ படத்தில் தனுஷ் கெத்து காட்டப் போகிறார் என்று முன்பும் கூட வதந்தி பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

லியோவில் அந்த நடிகர் கவுரவத் தோற்றத்தில் வருகிறார், இந்த நடிகர் வருகிறார் என ஏகப்பட்ட பெயர்கள் வெளியாகின. ஒரு பக்கம் லோகேஷ் நிறைய பேரை நடிக்க வைக்கிறார் மறுபக்கம் வதந்தி லிஸ்ட்டு வேறு பெரிதாக போய்க் கொண்டிருக்கிறது.

எது நடந்தாலும் சரி, ஹீரோயின் த்ரிஷாவை வில்லன்கள் கொலை செய்துவிடுவார்கள் என்பதை மட்டும் ரசிகர்கள் நம்புகிறார்கள். ஹீரோயினை கொடூரமாக கொலை செய்வதற்கு பெயர் போனவர் லோகேஷ் கனகராஜ். அதனால் த்ரிஷாவை படத்தில் உயிருடன் விட்டுவைக்க வாய்ப்பே இல்ல ராஜா என்கிறார்கள்.

இதற்கிடையே ஹீரோயின் த்ரிஷாவை விட அர்ஜுன் மனைவியாக நடிக்கும் மடோனா செபாஸ்டியனின் கதாபாத்திரம் தான் வெயிட்டானது என தகவல் வெளியாகியுள்ளது. ப்ரியா ஆனந்த், மடோனா, ஏஜெண்ட் டீனா, இன்னும் எத்தனை பேரை வைத்து த்ரிஷாவுக்கு டஃப் கொடுக்கப் போகிறீர்கள் லோகி?. அப்படி என்ன கதையை தான் படமாக்கி வருகிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

யார் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், எனக்கு ஷூட்டிங் இருக்கிறது என்று சத்தமில்லாமல் வேலை செய்து வருகிறார் லோகி. லியோ படத்தை அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். இது பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. வசூலில் புது சாதனை படைக்கும் என்று நம்பப்படுகிறது.

Samantha:சிகிச்சை, ஓய்வுக்காக நடிப்பில் இருந்து ஒரு வருஷம் பிரேக் எடுக்கும் சமந்தா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.