Niharika: நானும், சைதன்யாவும் பிரிந்துவிட்டோம்: விவாகரத்தை அறிவித்த மெகா குடும்பத்து நடிகை

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
நடிகை நிஹாரிகாவும், அவரின் கணவரான சைதன்யாவும் முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.

​நிஹாரிகா​மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகா கொனிடெலா. விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். அவருக்கும், குண்டூர் ஐ.ஜி. மகன் சைதன்யாவுக்கும் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருக்கும் அரண்மனையில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இந்நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.ரஞ்சித்​உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…​​விவாகரத்து​பிரிவு குறித்து சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் நிஹாரிகா. அதில் அவர் கூறியிருப்பதாவது, சைதன்யாவும், நானும் பிரிந்து செல்வது என்று முடிவு செய்திருக்கிறோம். ஆதரவாக இருக்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் நன்றி. இந்த நேரத்தில் பிரைவசி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். புரிந்து கொண்டதற்கு நன்றி என்றார்.
அறிவிப்பு​View this post on InstagramA post shared by Niharika Konidela (@niharikakonidela)​​பிரச்சனை​முன்னதாக சைதன்யாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்தினார் நிஹாரிகா. அவரும் நிஹாரிகாவை அன்ஃபாலோ செய்தார். பின்னர் சைதன்யாவுடன் தான் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினார் நிஹாரிகா. அதை பார்த்த ரசிகர்களோ, நிஹாரிகா, கணவர் பிரிந்துவிட்டார்கள் போன்று என பேசத் துவங்கினார்கள்.

​விவாகரத்து​நிஹாரிகாவுக்கும், சைதன்யாவுக்கும் சட்டப்படி விவாகரத்து கிடைத்துவிட்டது என தெலுங்கு ஊடகங்கள் இன்று தெரிவித்தன. இந்நிலையில் தான் விவாகரத்து குறித்து அறிவித்துள்ளார் நிஹாரிகா. அவருக்கு மெகா குடும்பத்து ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். ஒருவரையொருவர் குறை சொல்லாமல் அழகாக பிரிந்திருக்கிறீர்கள் என்கிறார்கள்.
​சந்தேகம்​நிஹாரிகாவின் சகோதரரும், நடிகருமான வருண் தேஜுக்கும், நடிகை லாவண்யா திரிபாதிக்கும் அண்மையில் ஹைதராபாத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் சைதன்யா கலந்து கொள்ளவில்லை. அதை பார்த்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். எல்லாம் நன்றாக சென்ற நிலையில் இப்படி விவாகரத்தில் வந்து முடிந்துவிட்டதே என மெகா குடும்பத்து ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.

​ரசிகர்கள் கவலை​மெகா குடும்பத்தில் இருந்து அடுத்தடுத்து இரண்டு நல்ல செய்தி வந்த நிலையில் இப்படி ஒரு செய்தியும் வந்திருக்கிறதே என்று பேசப்படுகிறது. வருண் தேஜுக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. அவரின் அண்ணன் ராம் சரணின் மனைவி உபாசனா பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தற்போது நிஹாரிகா விவாகரத்தை அறிவித்திருக்கிறாரே என்கிறார்கள் மெகா குடும்பத்து ரசிகர்கள்.

​Samantha:சிகிச்சை, ஓய்வுக்காக நடிப்பில் இருந்து ஒரு வருஷம் பிரேக் எடுக்கும் சமந்தா

​இப்படியாகிவிட்டதே​முன்னதாக நிஹாரிகாவுக்கு உதய்பூர் மாளிகையில் திருமணம் நடந்தது குறித்து ரசிகர்கள் பேசத் துவங்கிவிட்டார்கள். மெகா குடும்பத்தார் தனி விமானம் மூலம் உதய்பூர் சென்றார்கள். ராஜ குடும்பத்து திருமணம் போன்று மிக பிரமாண்டமாக நடந்தது. அனைவரும் அதை பற்றியே பேசினார்கள். அப்படி ஊரே மெச்சும் அளவுக்கு நடந்த திருமணம் தற்போது விவாகரத்தில் முடிந்துவிட்டது.

​Leo: லியோ ஷூட்டிங் முடிந்ததும் ரூ. 15 கோடியுடன் வெளிநாடு கிளம்பும் லோகேஷ் கனகராஜ்

​இன்ஸ்டாகிராம்​இன்ஸ்டாகிராமில் இருந்து திருமண புகைப்படங்கள் உள்ளிட்ட நிஹாரிகாவின் புகைப்படங்களை முதலில் நீக்கியது சைதன்யா தான். அதன் பிறகே நிஹாரிகாவும் நீக்கினார். இந்நிலையில் 10 நாட்கள் தியான ரெட்ரீட்டில் கலந்து கொண்ட புகைப்படத்தை அண்மையில் இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டார் சைதன்யா. எல்லாம் முடிந்துவிட்டது போன்று. இனி அவர்கள் சேர வாய்ப்பே இல்லை என பேச்சு கிளம்பியிருக்கிறது.Genie: ‘ஜீனி’ ஜெயம் ரவிக்கு ஜோடியான விஜய் சேதுபதி ‘மகள்’: இன்று நடந்த பூஜை​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.