ஹைதராபாத்: ஸ்டூடண்ட் நம்பர் 1 திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.எஸ் ராஜமெளலி.
பாகுபலி, RRR படங்களின் வெற்றிக்குப் பின் ராஜமெளலியின் மார்க்கெட் வேல்யூ எங்கேயோ சென்றுவிட்டது.
ஒரு படம் இயக்க 100 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தற்போது விளம்பரத்தில் நடிக்க பல கோடிகளில் சம்பளம் வாங்கியுள்ளாராம் ராஜமெளலி.
விளம்பரத்தில் நடிக்க கோடிகளில் சம்பளம்: ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் 1 திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.எஸ் ராஜமெளலி, தற்போது இந்தியளவில் டாப் 5 டைரக்டர்களில் ஒருவராக வலம் வருகிறார். மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் என தொடர்ந்து மெகா பிளாக் பஸ்டர் படங்கள் கொடுத்து மிரட்டினார்.
ரொம்பவே சிம்பிளான ஒன்லைன் ஸ்டோரியை தரமான திரைக்கதை, மேக்கிங் மூலம் பிரம்மாண்டமாக இயக்குவதில் இவர் கில்லாடி. பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலித்தது. அதேபோல் ராஜமெளலி கடைசியாக இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் 1200 கோடிகளுக்கு மேல் கல்லா கட்டியது. அதுமட்டும் இல்லாமல் இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதையும் வென்றுகொடுத்தார் ராஜமெளலி.
தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களாக இயக்கி வரும் ராஜமெளலிக்கு 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். எப்படியும் ஆயிரம் கோடிகளுக்கு மேல் கலெக்ஷன் காட்டுவதால் அவர் கேட்கும் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். அவர் இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் ஒரு பாடலிலும் செம்மையாக ஆட்டம் போட்டு வைப் கொடுத்தார்.
RRR படத்தைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்துள்ளார் ராஜமெளலி. முதன்முறையாக மகேஷ் பாபு, ராஜமெளலி கூட்டணி இணைந்துள்ளது இப்போதே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள்ளது. இது மகேஷ் பாபுவின் 29வது படமாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ராஜமெளலி ஒரு செல்போன் விளம்பரத்தில் நடித்துள்ளார். அதற்காக அவருக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதாவது ஒரு நிமிடம் கூட இல்லாத அந்த விளம்பரத்திற்காக 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம் ராஜமெளலி. இதனையறிந்த டோலிவுட் நடிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக, அதுவும் ஒரு விளம்பரத்திற்கு 30 கோடி சம்பளம் பெற்றுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனாலும் விளம்பரத்தில் நடிக்க ராஜமெளலி 30 கோடி ரூபாய் வாங்கியது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.