அவர் ஜாக்கிசான் மகள் அல்ல : வெளியான வைரல் வீடியோவின் பின்னணி

உலகம் முழுக்க ஆக்சன் படங்கள் பார்ப்பவர்களின் அன்புக்குரிய அபிமான கதாநாயகன் தான் ஜாக்கிசான். மொழி, இனம் கடந்து ஆறிலிருந்து அறுபது வரை சினிமா ரசிகர்களால் ஆராதிக்கப்படும் நாயகன் இவர். தற்போது வயதை காரணம் காட்டி படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, செலெக்ட்டிவாக மட்டும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஜாக்கிசான் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் ஜாக்கிசான் எப்படி உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார் என காட்டப்படுகிறது. அதை ஜாக்கிசானும் அருகில் இருக்கும் அவரது மகளும் பார்ப்பது போலவும், தந்தை தனக்காக படும் கஷ்டங்களை நினைத்து அவரது மகள் நெகிழ்ந்து கண்ணீர் விடுவது போலவும் அந்த வீடியோவில் காட்சி இடம் பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து, பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் படும் கஷ்டங்களை தெரியப்படுத்தி வளர்க்க வேண்டும், அப்போதுதான் வாழ்க்கையில் பிள்ளைகளும் பெற்றோர்கள் மீதும் அவர்கள் உழைப்பின் மீதும் மிகப்பெரிய மரியாதை வைப்பார்கள் என்று கருத்து சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் இந்த வீடியோவை ஜாக்கிசானுடன் இணைந்து பார்ப்பது அவரது நிஜ மகள் அல்ல, ஜாக்கிசான் சண்டைக் கலைஞராக நடித்துள்ள ஒரு படத்தில் அவரது மகளாக நடித்துள்ள நடிகை லியு என்பவர் தான்.. படத்தின் கதைப்படி அவர் ஜாக்கிசான் மகளாக நடித்துள்ளார் என்கிற உண்மை தற்போது வெளிப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.