சச்சின், தோனியை பின்னுக்கு தள்ளிய இந்த நட்சத்திர வீரர் – பிராண்ட் மதிப்பு ரூ. 1460 கோடியா…?

Brand Value Of Virat Kohli: சமீபத்திய மார்க்கெட்டிங் சர்வே என்ற ஆய்வில், சந்தையில் அதிக பிராண்ட் மதிப்பும், சந்தை மதிப்பும் கொண்ட இந்திய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது. முதல் பத்து பட்டியலில் அதிக பிராண்ட் மதிப்பு கொண்ட மூன்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் – விராட் கோலி, எம்எஸ் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் அடங்குவர்.

எம்எஸ் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் ரசிகர்களால் எப்போதும் ரசிக்கப்படும், சிலாகிக்கப்படும் வீரர்களாக கருதப்பட்டாலும், விராட் கோலி பிராண்ட் மதிப்பு துறையில் அவர்களை விஞ்சி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க பிரபலமாக உள்ளார். 

நாட்டிலேயே அதிக பிராண்ட் மதிப்பைக் கொண்ட இந்திய பிரபலங்களின் முதல் பத்து பட்டியலில், ரன்வீர் சிங் 181.7 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் முதலிடத்திலும், கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ். தோனி மற்றும் சச்சினை டெண்டுல்கர் ஆகியோரை விட விராட் கோலி முன்னணியில் அதுவும் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

“பிரபலங்களின் பிராண்ட் மதிப்பீட்டு அறிக்கை 2022: பிரதான நீரோட்டத்திற்கு அப்பால்” என்ற தலைப்பின்கீழ் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 177 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும் இது இந்திய மதிப்பில் சுமார் 1460 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் கோலி கடந்த ஐந்து ஆண்டுகள் முதலிடத்தில் இருந்தார். ஆனால், இந்தாண்டில் ரன்வீர் சிங்கால்  பின்னுக்கு தள்ளப்பட்டார்.

பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளவர், பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமார். இவர் 153.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் பிராண்ட் மதிப்பைக் கொண்டுள்ளார், மேலும் ஆலியா பட் 102.9 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் நான்காவது இடத்தைப் பிடித்தார், பட்டியலில் மிகவும் மதிப்புமிக்க பெண் பிரபலமாக இவர் இருக்கிறார்.

எம்எஸ் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் தொடர்ந்து இருந்தனர், ஆனால் விராட் கோலியால் இவர்கள் பின்தங்கியுள்ளனர். எம்எஸ் தோனியின் பிராண்ட் மதிப்பு ரூ.664 கோடி, பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் பிராண்ட் மதிப்பு ரூ.609 கோடியுடன் 8ஆவது இடத்தில் உள்ளார். விராட் கோலி தனது சொத்துக்கள், ஒப்புதல்கள் மற்றும் வணிக முதலீடுகள் உட்பட ரூ.1050 கோடியை தாண்டியதன் மூலம், உலகம் முழுவதும் உள்ள எல்லா காலத்திலும் பணக்கார கிரிக்கெட் வீரர் ஆக உருவெடுத்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.