பாஜகவின் அடுத்த தேசிய நகர்வு… இந்த 6 மாநிலங்களுக்கு குறி… மாறும் பெரிய தலைகள்!

2024 மக்களவை தேர்தலுக்கு பாஜக தயாராகி விட்டதாக ஒருபுறம் பேசப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கைகோர்க்க வகுத்து வரும் வியூகங்கள் சறுக்கலை சந்தித்து வருவதாக மறுபுறம் பேசப்படுகிறது. இப்படி தேசிய அரசியல் தகித்து கொண்டிருக்க பாஜக ஒரு அடி முன்னே சென்று கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

​கிழக்கிந்திய மாநிலங்கள் ஆலோசனை​இன்றைய தினம் கவுகாத்தி நகரில் பிகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 கிழக்கிந்திய மாநிலங்களின் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முக்கியமான தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.​பாஜக தேர்தல் வியூகங்கள்வரும் மக்களவை தேர்தலை எப்படி தயாராவது, அதற்கான வியூகங்கள் வகுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. பாஜகவின் களப் பணிகளை கவனிக்கையில், மாநிலத் தலைவர்கள் மாற்றம், எதிர்க்கட்சிகளை சிதற விடுதல், அதிருப்தி தலைவர்களை அரவணைத்தல், பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை அறிவித்தல், அயோத்தியில் ராமர் கோயில் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
​பாஜக தீவிர ஆலோசனை​​​மகாராஷ்டிரா அரசியல்சித்தாந்த ரீதியில் இல்லாத கட்சிகளை, அரசியல்வாதிகளை கபளீகரம் செய்வது பாஜகவிற்கு கைவந்த கலையாக மாறிவிட்டது. அதற்கு சமீபத்திய உதாரணமாக மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அஜித் பவாரை சொல்லலாம்.
4 மாநிலத் தலைவர்கள் மாற்றம்கட்சி ரீதியாக நடக்கும் மாற்றங்களை பொறுத்தவரை, தெலங்கானா, பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலத் தலைவர்களை பாஜக தேசிய தலைமை மாற்றியுள்ளது. இது வெறும் தொடக்கம் மட்டுமே. இனியும் அதிரடிகளும், புது ரத்தம் பாய்ச்சும் வியூகங்களும் தொடரும் என்கின்றனர்.
அண்ணாமலை அசைன்மென்ட்அதாவது, கேரளா, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் பாஜக மாநிலத் தலைவர்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தெற்கில் இரண்டு மாநிலங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அண்ணாமலை மூலம் தீவிர திராவிட எதிர்ப்பு அரசியலை பாஜக முன்னெடுத்து வருகிறது.
​தெற்கில் புது ரத்தம்அவரும் கொடுத்த அசைன்மென்டை கச்சிதமாக செய்து வருவதாக டெல்லி கருதுகிறது. எனவே இங்கு தற்போதைக்கு மாற்றம் கிடையாது. சமீபத்தில் தெலங்கானா, ஆந்திராவில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அடுத்தகட்டமாக கேரளா, கர்நாடகாவில் மாற்றம் நிகழப் போகிறது. இதன்மூலம் தெற்கில் புது ரத்தம் பாய்ச்ச பாஜக தயாராகி இருப்பதை பார்க்க முடிகிறது.
​அமைச்சரவை மாற்றத்திற்கு ரெடிஇதுதவிர மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கு காய் நகர்த்தி வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை தெலங்கானா மாநில பாஜக தலைவராக நியமித்தனர்.
இந்த வரிசையில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா குஜராத் மாநிலத் தலைவர் பதவிக்கான ரேஸில் முன்னிலையில் இருக்கிறாராம். இதன்மூலம் புதியவர்களை உள்ளே கொண்டு வரவும், கட்சி பணியில் சீனியர்கள் அதிக கவனம் செலுத்த வைக்கவும் முடியும் எனக் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.