மாமன்னன் வடிவேலுவுக்கு தேசிய விருது கொடுக்கணும்.. இயக்குநர் விக்னேஷ் சிவன் பக்கா பாராட்டு!

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, பகத் ஃபாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருவதை போலவே பாராட்டு வேட்டையும் நடத்தி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனும் இந்த படத்தை வெகுவாக பாராட்டி பெரிய அறிக்கையே வெளியிட்டுள்ளார்.

அதில், மாமன்னன் படத்தில் நடித்த வடிவேலுவுக்கு நிச்சயம் தேசிய விருது கொடுக்கணும் என குறிப்பிட்டுள்ளார்.

வடிவேலுக்கு தேசிய விருது: மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்! #MAAMANNAN

வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும்.

முக பாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி இறங்கியிருந்தாலும் அவருடைய காமெடி காட்சிகளை நினைவூட்டிவிடும் அபாயம் இருந்தாலும் தனது அபார நடிப்பால் திரையில்
முற்றிலுமாக புது பரிமாணத்தை எட்டியிருக்கும் வடிவேலு sir இந்த நூற்றாண்டு கண்ட ஆகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை!

உதய் சார் கேரியரில் இதுவே உச்சம். நிஜ வாழ்வில் ஒரு அரசியல் ஆளுமையாக இருந்தபோதிலும் ஒரு இயக்குனர் தனக்கான அரசியலை பேச முழு சுதந்திரம் கொடுத்ததோடு இந்த மாபெரும் படைப்பு உருவாக பக்க பலமாக துணை நின்றதில்
அவரது நேர்மை வெளிப்படுகிறது.

தமிழரின் பெருமையை தன் இசையின் மூலம் உலகறியச் செய்த ஏ.ஆர்.ரகுமான்
sir இப்படத்தில் தமிழ் உணர்வுகளுக்கு உலகத்தரமான இசையை வழங்கியுள்ளார். தமிழ் பாரம்பரிய இசையையும் இன்டர்னேஷனல் தரத்தையும் ஒற்றைப் புள்ளியில் கொண்டுவந்து இணைப்பதெல்லாம் இசைப்புயலுக்கு மட்டுமே சாத்தியம்.

சிறந்த கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் ஃபகத் ஃபாசிலுக்கு #FahadFaZil இது இன்னொரு மைல்கல். திரையில் அவரை பார்க்கும் போதெல்லாம் வெறுப்புணர்வு ஏற்படுவதே அவர் நடிப்புக்கு சான்று.

Vignesh Shivan says Vadivelu is all eligible for National Award for Mamaannan acting

மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் #TheniEashwar என ஒவ்வொருவரும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி இந்த மாமன்னனுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார்கள்! என விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் மிஸ் ஆகல: மாமன்னன் படத்தை நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் பாராட்டிய போது நடிகை கீர்த்தி சுரேஷின் பெயர் மிஸ் ஆன நிலையில், தானா சேர்ந்த கூட்டம் இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை கீர்த்தி சுரேஷையும் சேர்த்துக் குறிப்பிட்டு பாராட்டி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.