Maamannan:மாமன்னன், விஜய்யின் கோட்டையில் வசூல் மன்னன்: ரஜினியால் கூடிய புது கூட்டம்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Udhayanidhi Stalin: மாரி செல்வராஜின் மாமன்னன் படம் கேரளாவில் நல்ல வசூல் செய்து கொண்டிருக்கிறது.

​மாமன்னன்​Maamannan:மாமன்னன் வடிவேலுவின் மனைவி: 50 வயதில் நடிக்க வந்த பெரிய வீட்டு மருமகள்வைகைபுயல் வடிவேலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மாமன்னன் படம் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. மாரி செல்வராஜின் அரசியல் பேசும் மாமன்னன் படம் அனைத்து தரப்பினருக்கும் பிடித்திருக்கிறது. இந்நிலையில் தான் மாமன்னனுக்கு கேரளாவிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.பா. ரஞ்சித்​உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…​​கேரளா வசூல்​மாமன்னன் படம் ரிலீஸான முதல் வார இறுதிநாட்களில் கேரளாவில் ரூ. 1.50 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவிலும் படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் நல்லவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதனால் அங்கும் மாமன்னனின் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

​குவியும் பாராட்டு​மலையாள திரையுலகை சேர்ந்தவர்களும் மாமன்னன் படம் பார்த்துவிட்டு அதை சமூக வலைதளங்களில் பாராட்டுகிறார்கள். பிரபல மலையாள நடிகையான மாலா பார்வதி மாமன்னன் படம் பார்த்த பிறகு தன் ஃபேஸ்புக் பக்கத்தில் போட்ட போஸ்ட் வைரலானது. படக்குழுவை பாராட்டியதுடன், வடிவேலுவுக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தது தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

​Maamannan:மாமன்னன் வடிவேலுவுக்கு தேசிய விருது கொடுக்கணும்: நயன்தாரா பட நடிகை

​விஜய் கோட்டை​கேரளாவில் தளபதி விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். விஜய் படம் ரிலீஸானால் அங்கு திருவிழா போன்று இருக்கும். விஜய் படங்கள் கேரளாவில் தொடர்ந்து நல்ல வசூல் செய்து வருகின்றன. இந்நிலையில் விஜய்யின் கோட்டையான கேரளாவில் ஃபஹத் ஃபாசிலின் மாமன்னன் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
​ரஜினிகாந்த்​எந்த புதுப்படம் வந்தாலும் அதை தவறாமல் பார்த்துவிடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் தான் அவர் மாமன்னன் படம் பார்த்தார். படம் பார்த்த அவரால் சும்மா இருக்க முடியவில்லை. உடனே மாரி செல்வராஜை தன் வீட்டிற்கு வரவழைத்து பாராட்டினார். மேலும் மாமன்னன் படத்தை பாராட்டி ட்வீட் போட்டார். அதை பார்த்து படக்குழு மகிழ்ந்தது.

​Maamannan:மாமன்னன் நேற்று மட்டும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?: ரஜினியால் மேலும்…

​ரஜினி ரசிகர்கள்​ரஜினியே பாராட்டிவிட்டார். அப்படி என்றால் அந்த மாமன்னனை தியேட்டரில் பார்த்துவிட்டு வர வேண்டும் என தலைவர் ரசிகர்கள் தியேட்டருக்கு செல்லத் துவங்கிவிட்டார்கள். அதனால் மாமன்னன் படம் ஓடும் தியேட்டர்களில் ரஜினி ரசிகர்களை அதிகம் காண முடிகிறது. ரஜினியின் ஒரு ட்வீட் மாமன்னனுக்கு பேருதவியாக மாறிவிட்டது.
​சக்சஸ்​மாமன்னன் படம் ரிலீஸான இரண்டாவது நாளே சக்சஸ் பார்ட்டி வைத்து, கேக் வெட்டி கொண்டாடினார்கள். படம் ரிலீஸான உடனேயே சக்சஸ் பார்ட்டியா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். தற்போது மாமன்னன் படத்திற்கு கிடைக்கும் வசூல் விபரங்களை அறிந்த பிறகு உதயநிதி ஸ்டாலின் கேக் வெட்டி கொண்டாடியதில் தவறே இல்லை என்கிறார்கள்.
​உதயநிதி ஓய்வு​மக்கள் பணி செய்ய வசதியாக மாமன்னன் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் உதயநிதி ஸ்டாலின். அவரின் கடைசி படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. உதயநிதி ஸ்டாலின் கெரியரிலேயே பெரிய ஓபனிங் கிடைத்த படமாக மாமன்னன் அமைந்துள்ளது. வெற்றிப் படத்துடன் சந்தோஷமாக ஓய்வு பெறுகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.