சென்னை: சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இன்று மாலை முதல் ஜெயிலர் வைப் கன்ஃபார்ம் தான்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘காவாலா’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
சூப்பர் ஸ்டாரின் இன்ட்ரோ பாடலாக இல்லாமல் தமன்னாவின் ஆட்டத்தில் கிறங்கடிக்கவுள்ளது காவாலா சாங்.
இதனால் ஏமாற்றத்துடன் இருந்த தலைவரின் ரசிகர்களுக்கு வெறித்தனமான போஸ்டர் வெளியாகி வைப் கொடுத்துள்ளது.
டெரர் லுக்கில் சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. அண்ணாத்த படத்துக்குப் பின்னர் ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டாரும் இத்திரைப்படம் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜெயிலர் படப்பிடிப்பை நிறைவு செய்த நெல்சன், அதன் பின்னரே ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. அதன்படி ‘காவாலா’ என்ற டைட்டில் உருவாகியுள்ள ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள், தமன்னாவின் இன்ட்ரோ பாடலாக உருவாகியுள்ளது.
எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இன்ட்ரோ சாங் தான் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியாகும். ஆனால், ஜெயிலர் படத்தில் தமன்னாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இதனால் தலைவரின் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் இருந்தனர். அவர்களுக்கு எனர்ஜி கொடுக்கும் விதமாக தரமான போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் இந்த மிரட்டலான போஸ்டர் செம்ம ட்ரெண்டாகி வருகிறது.
கையில் சுருட்டு பற்ற வைத்துள்ள ரஜினி, கூலர்ஸ் அணிந்தபடி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துள்ளார். காலா கெட்டப்பில் மாணிக் பாட்ஷா டெரர் லுக்கில் மிரட்டலாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இந்த போஸ்டர், வேற லெவலில் வைப் கொடுக்கிறது. ஆனால், இது சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த ஜெயிலர் போஸ்டர் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக ரத்தக் கறையுடன் பல கூர்மையான வாள்கள் தொங்கிக் கொண்டிருக்க, அதன் நடுவே செம்ம ஸ்டைலாகவும் கெத்தாகவும் நடந்து வரும் ஃபேன்மேட் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. ரஜினியின் இந்த போஸ்டரையும் அவரது ரசிகர்கள் வெறித்தனமாக ட்ரெண்ட் செய்து வந்தனர். இதனிடையே இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.