டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்பீட் 400 பைக் மாடலின் என்ஜின் விபரம், நுட்பவிபரங்கள், நிறங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன-ரோடு விலை பட்டியல் என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
Triumph Speed 400
பஜாஜ்-டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் ஸ்பீட் 400 பைக்கில் புதிய TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
ட்ரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் மைலேஜ் 32 Kmpl வழங்கும்.
ஸ்பீட் 400 பைக்கில் ரைடு பை வயர் மற்றும் ஸ்விட்ச் ஆஃப் செய்யக்கூடிய டிராக்ஷன் கட்டுப்பாடு உள்ளது. டிஸ்ப்ளேவில் ஒருங்கிணைந்த எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
ஸ்பீட் 400 பைக்கில் புதிய டியூபுலர் ஸ்டீல் சேஸ் கொண்டுள்ளது. இந்த வடிவமைப்பு சிறப்பான மற்றும் நிலைப்பினை ஏற்படுத்தும் கையாளுதலுக்கான உறுதிப்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஸ்பீட் 400 மாடலின் பரிமாணங்கள் வீல்பேஸ் 1377 mm மற்றும் இருக்கை உயரம் 790 mm பெற்று 170 கிலோ எடை கொண்டுள்ளது.
43 மிமீ அப்சைடு டவுன் முன் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டு 140 மிமீ பயணத்தை வழங்குகிறது. பின்பக்கத்தில்130மிமீ பயணக்கின்ற மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன் ஆனது ஸ்பிரிங் ப்ரீலோட் அட்ஜஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிரேக்கிங் பொறுத்தவரை, ட்ரையம்ப் ஸ்பீட் 400 நான்கு பிஸ்டன் ரேடியல் காலிபர் பொருத்தப்பட்டுள்ளது, முன்பக்கத்தில் 300 mm நிலையான டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 230 mm டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
ஸ்பீட் 400 பைக்கின் இரண்டு முனைகளிலும் 17 இன்ச் டயர் பொருத்தப்பட்டு டயரை பெற்றுள்ளது.
டிரையம்ப் ஸ்பீட் விலை ₹. 2.33 லட்சம் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ.10,000 குறைவாக ₹ 2.23 லட்சத்தில் கிடைக்கும்.
டிரையம்ப் ஸ்பீட் 400 நுட்பவிபரங்கள்
என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் Speed 400 | ||
வகை |
Liquid-cooled, 4 valve, DOHC, single-cylinder, FI |
|
Capacity |
398.15 cc |
|
Bore x Stroke |
89.0 mm x 64.0 mm |
|
Compression |
12:1 |
|
அதிகபட்ச பவர் |
40 PS / 39.5 bhp (29.4 kW) @ 8,000 rpm |
|
அதிகபட்ச டார்க் |
37.5 Nm @ 6,500 rpm |
|
கிளட்ச் |
வெட் மல்டிபிள் கிளட்ச் |
|
கியர்பாக்ஸ் |
6 ஸ்பீடு சிலிப்பர் அசிஸ்ட் |
Speed 400 and Scrambler 400 X | ||
சேஸ் |
ஹைப்ரிட் ஸ்பைன்/பெரிமீட்டர், டியூபுலர் ஸ்டீல், போல்ட்-ஆன் ரியர் சப்ஃப்ரேம் |
|
ஸ்விங் ஆர்ம் |
இரட்டை பக்க, கேஸ்ட் அலுமினிய அலாய் |
|
முன்பக்க வீல் | கேஸ்ட் அலுமினிய அலாய்
10 ஸ்போக், 17 x 3 in |
கேஸ்ட் அலுமினிய அலாய்
10 ஸ்போக் 19 x 2.5 in |
பின்பக்க வீல் | கேஸ்ட் அலுமினிய அலாய்
10 ஸ்போக், 17 x 4 in |
கேஸ்ட் அலுமினிய அலாய்
10 ஸ்போக், 17 x 3.5 in |
டயர் | Metzeler Sportec M9RR | Metzeler Karoo Street |
முன்புற டயர் | 110/70 R17 | 100/90 R19 |
பின்புற டயர் | 150/60 R17 | 140/80 R17 |
முன்புற
சஸ்பென்ஷன் |
43mm அப் சைடு டவுன் ஃபோர்க் 140mm wheel travel |
43mm அப் சைடு டவுன் ஃபோர்க் 150mm wheel travel |
பின்புற
சஸ்பென்ஷன் |
மோனோஷாக் ப்ரீ லோட் அட்ஜெஸ்ட் 130mm wheel travel |
மோனோஷாக் ப்ரீ லோட் அட்ஜெஸ்ட் 150mm wheel travel |
முன்புற பிரேக் | 300mm டிஸ்க் 4 பிஸ்டன் ரேடியல் காலிப்பர், ABS |
320mm டிஸ்க்
4 பிஸ்டன் ரேடியல் காலிப்பர், ABS |
பின்புற பிரேக் | 230mm டிஸ்க் ஃபுளோட்டிங் காலிப்பர், ABS | 230mm டிஸ்க் ஃபுளோட்டிங் காலிப்பர், ABS |
டிரையம்ப் ஸ்பீட் 400 நிறங்கள்
2023 Triumph Speed 400 on-road Price in TamilNadu
2023 டிரையம்ப் ஸ்பீட் 400 மோட்டார்சைக்கிள் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் சென்னை விலை ₹ 2,63,045 ஆகும்.
Triumph 400 Rivals
டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கிற்கு போட்டியாக ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, மீட்டியோர் 350, ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள், ஹோண்டா சிபி 350, ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
Faq Triumph Speed 400
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக் பவர் விபரம் ?
TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க், 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் மைலேஜ் 32kmpl
டிரையம்ப் ஸ்பீட் 400 டாப் ஸ்பீடு விபரம் ?
டிரையம்ப் ஸ்பீட் 400 டாப் ஸ்பீடு 160km/hr
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் ஆன்-ரோடு விலை எவ்வளவு ?
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் ஆன்-ரோடு விலை ₹ 2,63,045
Triumph Speed 400 Bike Photos Gallery
Triumph Speed 400 Motorcycle
டிரையம்ப் மோட்டார்சைக்கிள் முதல் 400சிசி மாடல் ஸ்பீட் 400 (Speed 400) பைக் விலை மற்றும் சிறப்புகள்
Product Brand:
Triumph Motorcycles
4.3
Pros
- 40 hp என்ஜின்
- சிறப்பான ஸ்டைலிங் அம்சங்கள்
- ரைடிங் அனுபவம்
Cons
- குறைந்த டீலர் எண்ணணிக்கை