TTF Vasan: மஞ்சள் வீரன்: அடேங்கப்பா, முதல் படத்துக்கே டிடிஎப் வாசனுக்கு இத்தனை கோடி சம்பளமா?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
2கே கிட்ஸுகளின் ரியல் லைஃப் ஹீரோவாக இருப்பவர் டிடிஎப் வாசன். பைக்கில் வேகமாக சென்று வீடியோ எடுத்து அதை தன் யூடியூப் சேனலில் வெளியிட்டு 2கே கிட்ஸுகளின் மொத்த கவனத்தையும் இழுத்தவர்.

உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
இந்நிலையில் தான் அவர் கோலிவுட்டில் ஹீரோவாகிவிட்டார். செல்அம் எழுதி, இயக்கும் மஞ்சள் வீரன் படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார் வாசன்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ரூ. 6 கோடி பட்ஜெட்டில் உருவாகும் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிடிஎப் வாசனின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது. மேலும் படத்தின் பூஜையும் அன்று தான் நடந்தது.

மஞ்சள் வீரன் படத்தில் நடிக்க வாசனுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்திருப்பார்கள் என்பதை தெரிந்துகொள்ள பலரும் ஆவலாக இருந்தார்கள். இந்நிலையில் தான் அந்த விபரம் தெரிய வந்திருக்கிறது.

முதல் படம் என்பதால் வாசனுக்கு குறைவான சம்பளமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் வாசனுக்கு ரூ. 1.8 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். யூடியூப் சேனல் வைத்து நடத்துகிறார். அடிக்கடி பொது இடங்களில் இளைஞர்களை கூட்டி கெத்து காட்டுகிறார். இதை எல்லாம் மனதில் வைத்து தான் முதல் படத்திற்கே கோடியில் சம்பளம் கொடுத்திருப்பார்கள் என பேசப்படுகிறது.

முதல் படத்திற்கே இந்த வாசனுக்கு ரூ. 1.8 கோடி சம்பளமா என ரசிகர்கள் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கே வியந்து பேசினால் எப்படி?

மஞ்சள் வீரன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை சென்னையில் இருக்கும் பிரபல தனியார் கல்லூரியில் வாசனின் ரசிகர்களான 2கே கிட்ஸுகளுக்கு முன்னிலையில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.

வாசன் ஹீரோவாக வேண்டும் என்று விரும்பிய 2கே கிட்ஸுகளின் மனதை குளிர வைக்கவே இப்படி ஒரு திட்டமாம்.

மஞ்சள் வீரன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் வருகிறார் கூல் சுரேஷ். படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவிருக்கிறது. படத்தின் கதையை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் மஞ்சள் வீரன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு போஸ் கொடுக்க தான் தயாரானது எப்படி என்கிற வீடிோவை தன் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார் டிடிஎப் வாசன். அந்த வீடியோவுக்கு லைக்ஸும், வியூஸும் வந்து குவிந்துவிட்டது.

வாசன் தன் சேனலலில் எந்த வீடியோ வெளியிட்டாலும் வியூஸும், லைக்ஸும் வந்து குவிகிறது. அதனால் மஞ்சள் வீரன் வீடியோவுக்கு வியூஸ் வந்ததில் ஆச்சரியம் இல்லை.

இதற்கிடையே படப்பிடிப்பு முடியும் வரை பைக்கில் எங்கும் ரைடு கிளம்பிவிடாதீர்கள். ஷூட்டிங் முடிந்த பிறகு செல்லுங்கள் ப்ரோ என 2கே கிட்ஸுகள் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

Nayanthara: நயன்தாரா பற்றி 2 சூப்பர் தகவல் சொன்ன லேடி சூப்பர் ஸ்டார் 75 பட நடிகை

மஞ்சள் வீரன் படத்தை 2கே கிட்ஸுகளை மட்டும் மனதில் வைத்து எடுக்கவில்லையாம். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் எடுக்கிறார்களாம். இதற்கிடையே அது என்ன மஞ்சள் வீரன் என ஒரு தலைப்பு என்கிறார்கள் ரசிகர்கள்.

ஏன், கார்த்தி பருத்திவீரனாக வந்து வெற்றி பெறவில்லையா?. அதே போன்று எங்க ஆளு மஞ்சள் வீரனாக வந்து ஹிட் கொடுப்பார் என்கிறார்கள் 2கே கிட்ஸுகள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.