புதுடில்லி:காஷ்மீர் குங்குமப்பூவின் விலை, வெள்ளி விலையை காட்டிலும் ஐந்து மடங்கு உயர்ந்து, 1 கிராம் 325 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு, 1 கிலோ காஷ்மீர் குங்குமப்பூ, 2 லட்சம் ரூபாயாக விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 3.25 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. சமீபத்தில், காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவியியல் குறியீடு வழங்கப்பட்டதே, இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
புவியியல் குறியீடு பெற்றதன் வாயிலாக, சர்வதேச சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஈரானிய குங்குமப்பூவின் போட்டியை, காஷ்மீர் குங்குமப்பூ எதிர்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரியாணி மற்றும் இதர உணவுகளின் சுவை, நிறம் மற்றும் நறுமணத்தை அதிகரிக்கும் குங்குமப்பூவின் விலை அதிகரிப்பால், தொடர் சரிவைக் கண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, காஷ்மீரின் விவசாய துறை இயக்குனர் சவுத்ரி முகமது கூறியதாவது:
உலகில் புவியியல் குறியிடப்பட்ட ஒரே குங்குமப்பூ காஷ்மீரில் மட்டுமே காணப்படுகிறது. இதன் வர்த்தகம் தற்போது அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா ஆகிய இடங்களில் துவங்கிஉள்ளது.
காஷ்மீர் குங்குமப்பூவின் வியாபாரம் லாபகரமாக உள்ளதால், விவசாயிகள் தங்கள் அறுவடைக்கு நல்ல விலையை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement