நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கும், இலங்கை அணிக்கும் இன்று (8) கொழும்பு பீ. சாரா ஓவல் மைதானத்தில் ரி 20 போட்டி ஆரம்பமாகவுள்ளது.
ரி 20 இப்போட்டிக்கு இலங்கை பெண்கள் அணியிலிருந்து 15 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஜீலை 12ஆம் திகதி வரை 3 போட்டிகளும் நடைபெற உள்ள நிலையில் தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை மகளிர் அணியானது குறிப்பிட்ட ஒருநாள் போட்டிகளில் நியுசிலாந்து அணிக்கு எதிராக ஆடவுள்ளதுடன், அணி உறுப்பினர்களில் எவ்வித மாற்றமும் செய்யப்போவதில்லை. அத்துடன் குறிப்பிட்ட இவ் அணியே பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாடி வெற்றியீட்டிய அணியாகும்.
இலங்கை பெண்கள் அணியானது பங்களாதேஷ் இற்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் 1-0 என்ற கணக்கில் வெற்றியீட்டியது. அந்தவகையில் சாமரி அத்தபது (அணி தலைவர்), விஷ்மி குணரத்ன, அனுக்ஷா சஞ்சீவனி, அசினி பெரேரா, நிலக்ஷி த சில்வா, கவிஷா தில்ஹாரி, ஓஷதி ரணசிங்க, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர, உதேஷிகா பிரபோதனி, ஹங்சிமா கருணாரத்ன, இனோசி பிரணாந்து, காவ்யா காவிந்தி, இமேஷத துலானி ஆகியோர் இப் போட்டியில் பங்கெடுக்க உள்ளனர்.