தெலுங்கில் வெளியாகும் மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மாமன்னன். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.
தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுவதாக படக்குழுவினர்கள் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். தெலுங்கில் இந்த படத்திற்கு நாயக்குடு என்று தலைப்பு வைத்துள்ளனர். வருகின்ற ஜூலை 14ம் தேதி இந்த படத்தை ஆந்திர, தெலுங்கானா மாநிலத்தில் சுரேஷ் புரொடக்சன்ஸ் மற்றும் ஏசியன் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர்.