சென்னை: நடிகை குஷ்பூ அடுத்தடுத்த தளங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.
தன்னுடைய பிட்னசிற்கும் அதிக நேரங்களை செலவழிக்கிறார். வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் இவரை அதிகமாக பார்க்க முடிகிறது.
எங்கிருந்துதான் இவருக்கு மட்டும் இவை எல்லாவற்றையும் சமாளிக்க நேரம் கிடைக்கிறதோ என்று அவரது ரசிகர்கள் கேட்கும் வகையில் இவரது செயல்பாடுகள் காணப்படுகின்றன.
கருப்புநிற புடவையில் ஜொலிக்கும் குஷ்பூ: நடிகை குஷ்பூ 90களின் காலகட்டங்களில் மிகவும் பிசியான நடிகையாக இருந்தவர். தொடர்ந்து கமல், ரஜினி சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் தன்னுடைய படத்தை இயக்கிய இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ஒருவர் நடிகையாகவும் மற்றவர் தயாரிப்பாளராகவும் ஆக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகும் நடிகை குஷ்பூ பிசியாகவே காணப்படுகிறார். சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட குஷ்பூ, தயாரிப்பாளர், சின்னத்திரை நடிகை, சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளர், ரியாலிட்டி ஷோக்களின் நடுவர் என பன்முகம் காட்டி வருகிறார். அரசியலிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டுவரும் குஷ்பூ, தன்னுடைய பிட்னசில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கொழுக் மொழுக்கென்றிருந்த குஷ்பூ, என்ன நினைத்தாரோ என்னவோ, உடலை ஸ்லிம்மாக்கியுள்ளார்.
இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் தனியாகவும், குடும்பத்தினருடனும் இவரை பார்க்க முடிகிறது. அந்தப் புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் குஷ்பூ. மேலும் தன்னுடைய அழகு ரகசியங்களையும் இவர் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் வாழைப்பழ ஹேர் மற்றும் பேஸ் பேக் போட்டுக்காட்டி ரசிகர்களை அசத்தினார். இவ்வாறு பன்முகத் திறமை இருந்தாலும் டைம் மேனேஜ்மெண்ட் இருந்தால் மட்டுமே இவை அனைத்தையும் ஒருசேர சிறப்பாக்க முடியும்.
அந்த வகையில் குஷ்பூ, தன்னுடைய ரசிகர்களை இந்த வயதிலும் கவர்ந்து வருகிறார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் குஷ்பூ, தற்போது கருப்பு நிற புடவையில் புதிய புகைப்படத்தை வெளியிட்டு அசத்தியுள்ளார். மேலும் கருப்பு நிறமில்லாமல் மற்ற எந்த கலரும் அந்த அளவிற்கு ஆழமான உணர்வை கொடுப்பதில்லை என்று அவர் கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தன்னுடைய மகள் அவந்திகா சுந்தரின் போட்டோஷுட் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார் குஷ்பூ. மேலும் அவர் தனது இளவரசி என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவும் புகைப்படங்களும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. வெளிநாட்டில் நடிப்பு சார்ந்த படிப்பை முடித்துள்ள இவர் விரைவில் ஹீரோயினாக களமிறங்கவுள்ளதாக குஷ்பூ தனது பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.