சென்னை: முன்பைவிட பயங்கர பிஸியாக வலம் வருகிறார் எஆர் ரஹ்மான்.
முன்பெல்லாம் ரொம்பவே லிமிடெட் ஆக படங்களுக்கு இசையமைத்து வந்தவர், இப்போது அப்படியே மாறிவிட்டார்.
சமீபத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான மாமன்னன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
இந்நிலையில் ஏஆர் ரஹ்மானை மியூசிக் ராக்ஸ்டார்ஸ் தமன், டிரம்ஸ் சிவமணி, சிங்கர் கார்த்திக் ஆகியோர் திடீரென சந்தித்துள்ளனர்.
இசைப்புயலை ரவுண்டு கட்டிய ராக்ஸ்டார்ஸ்: ரோஜா படத்தில் அறிமுகமான அதேவேகத்தில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக இசையில் மிரட்டி வருகிறார் ஏஆர் ரஹ்மான். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என செல்லும் இடமெல்லாம் இசையால் மனங்களை வெல்வதும், விருதுகளை தட்டித் தூக்குவதும் இவருக்கு கை வந்த கலை. இப்போதும் இந்தியாவின் நம்பர் 1 இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
அதேபோல், பல திறமையான இசைக் கலைஞர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்களை திரையுலகில் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஏஆர் ரஹ்மானின் குழுவில் இருந்தும், மியூசிக் இன்ஸ்டிடியூட்டில் படித்தும் பலர் இசைத்துறையில் அடியெடுத்து வைத்துள்ளனர். முன்பெல்லாம் அதிகம் பேசாத ஏஆர் ரஹ்மான், கடந்த சில வருடங்களாகவே தக் லைஃப் தலைவராக ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.
சமீபத்தில் கூட மாமன்னன் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஏஆர் ரஹ்மானின் பதில்கள் ஒவ்வொன்றும் சோஷியல் மீடியாக்களில் வைரலாகின. இந்நிலையில், டோலிவுட் ராக்ஸ்டார் தமன், டிரம்ஸ் சிவமணி, சிங்கர் கார்த்திக் ஆகியோர் ஏஆர் ரஹ்மானை நேரில் சந்தித்துள்ளனர். பாய்ஸ் படத்தில் டிரம்மராக நடித்து பிரபலமான தமன், இப்போது ரியல் மியூசிக் டைரக்டராக கலக்கி வருகிறார்.
அதேபோல், ஏஆர் ரஹ்மான் இசையில் பாடி சிங்கராக அறிமுகமானவர் பாடகர் கார்த்திக். ஏஆர் ரஹ்மானுடன் இளம் வயதில் இருந்தே டிரம்மராக பயணித்து வருபவர் சிவமணி. இப்படி இவர்கள் மூவரும் ஏஆர் ரஹ்மானுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏஆர் ரஹ்மான் அருகே டிரம்ஸ் சிவமணி அமர்ந்திருக்க, அவர்களுக்கு பின்னால் கார்த்திக்கும் தமனும் நிற்கின்றனர்.
ஏஆர் ரஹ்மானை தவிர மற்ற மூவரும் வெள்ளை நிற குர்தாவில் க்யூட்டாக போஸ் கொடுக்க, இசைப்புயல் வழக்கம் போல தனது சிரிப்பால் ரசிகர்களுக்கு பாசிட்டிவ் வைப் கொடுத்துள்ளார். ராக்ஸ்டார்கள் தமன், டிரம்ஸ் சிவமணி, கார்த்திக் மூவரும் இணைந்து இசைப்புயலை ரவுண்டு கட்டி என்ன சம்பவம் செய்கிறார்களோ என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஆனாலும், இவர்கள் சந்தித்துக் கொண்டதன் காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.